பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

229

சொல்லல்’ என்ற அழகில்லையென்று கூறிக் கூறலாம். அன்றியும் இவ் விஷயத்தில் ஒருவரும் துணிந்து கூறுதலியலாது; நூற்பரப்பினுள் யாங்கேனும் தக்க சொற்கள் கிடைப்பினுங் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்த தனித்தமிழ்ச் சொற்களும் பலவுள.

ஒருகாலத்தில் யாம் வடமொழிப் புலவரொருவரொடு சல்லாபஞ்செய்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென்று “மெய், வாய், கண், மூக்கு, செவியென்ற வைம்பொறியாலும் சிறந்துவிளங்கி யாக்கை நலம் வாய்ந்த தமிழ்மகள், தான் சம்ஸ்கிருத நாயகனை யெதிர்ப்பட்டு மணக்குங்காறும், முகங் காட்டாது தலைகவிழ்ந்து நின்றனள்! இஃதென்னே!” என்று கூறிப் புன்னகை செய்தனர். அஃதுணர்ந்த யாமுங் காலந் தாழ்த்தலின்றி, அவர் எதிர்பாராத வண்ணமாய், “எல்லாவாற்றானும் யாக்கை நலன் வாய்ந்தொளிருந் தமிழ்மகள் தன்னை மணக்குமாறு போந்த வடமொழிநாயகன் மூங்கையாய் வாய் திறத்தலின்றி முகத்தினாற் பல சைகைகள் செய்து நின்றமைகண்டு, முகஞ்செய்து புறக்கணித்து நின்றனள்! இஃதென்கொலோ!” என்று கூறி இளநகை யரும்பினம். இச்சம்பாஷணையின் பொருளாவது, அவர் தமிழில் முகத்திற்குத் தக்க சொல்லில்லையென்றார். யாம், ‘முகம்’ தமிழ்ச்சொல்லே என்பாரோடிணங்கி அதனை வலியுறுத்திச் சொல்லு முகத்தால், வடமொழியில் முகத்தின் சொற்களைத் தவிர்த்து வாய்க்குத்தக்க சொல்லின்மை காட்டி, அது பேச்சு வழக்கற்ற பாஷையென்று குறித்தனம். இச்சல்லாபத்தை அறிவுடையோர் விநோதார்த்தமாகக் கொண்டு எம்மைக் கடைக்கணிப்பாராக.

தமிழ்ச்சொற் பரப்போ ஒரு பெருங்கடல் போன்று விளங்குகின்றது. தமிழ்ச்சொற்க ளனைத்தையுங் கோவைசெய்து வகுத்த நிகண்டுகளும் அகராதிகளும் குறைபாடுடையனவாய் நிற்கின்றன. ஒரு நூலேனும் சொற்பொருளாராய்ச்சிசெய்து கூறவில்லை. யாவும் சொற்பொருள் மட்டிற் கூறுகின்றன; சொல்லின் பகுதிகளாவன இவை யென்றுஞ் சுட்டிற்றில. ஆதித் தமிழர்க்கு ஒன்று முதல் நூறாயிரங்காறும் எண்ணத் தெரிந்திருந்தது; ஏனெனில் இவற்றைக் குறிக்குஞ் சொற்களெல்லாந் தனித்தமிழ்ச் சொற்களாம். ஆழாக்கு, உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலன் என்ற முகத்தலளவைக் கணக்கும், சாண், அடி, முழம் என்ற நீட்டலளவைக்கணக்கும், பலம், வீசை, மணங்கு, என்ற எடுத்தலளவைக்கணக்கும் , கால், அரைக்கால், மாகாணி, மா, அரைமா, காணி, முந்திரி, இம்மி என்ற கீழ்வாய்க் கணக்கும் அவற்றின் குறியீடுகளும் தமிழரது கணக்கறிவின் உயர்வை விளக்குகின்றன. ‘தொண்ணூறு’, ‘தொள்ளாயிரம்’ என்ற சொற்களைக் குறித்துப் பலப்பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள. எனினும் அவற்று ளொன்றேனும் எமக்கு மன அமைதி தரவில்லை. ‘தொண்டு’ என்பது ஒன்பதிற்குப் பெயராய் நிகண்டிலும், இலக்கியங்களிலும் பயின்று வருவதனால், அச்சொல்லை ‘ஒன்பது’ என்ற விடத்தில் நிறுத்தித், ‘தொண்டு+நூறு=தொண்ணூறு’ எனவும், ‘தொண்டு+