பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

யோகிக்கின் றனர். குறிலிணை மொழியிறுதியில் மகரம் தெளிவாகச் செவிப் புலனுறாமையின் இவ்வேறுபாடு வேண்டப் படுவதாயிற்று. இதைத்தான் மொழியிறுதிப் போலியென நன்னூலார்,

“மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே”

என்ற சூத்திர விதியின்கட் கூறுவா ராயினார். சில குற்றுகரவீற்று அஃறிணை மொழிகளும் தெளிவு கருதி, இறுதி யுகரங்கெடுத்து ‘அர்’ ஏற்றி புச்சரிக்கப் படுகின்றன. ‘வண்டர்’, ‘சுரும்பர்’ என்ற மென்றொடர்க் குற்றுகர மொழியினும், ‘சிறகர்’ என்ற வுயிர்த்தொடர்க் குற்றுகர மொழியினும், ‘இடக்கர்’ என்ற வன்றொடர்க் குற்றுகர மொழியினும் இவ்வுண்மைகாண்க. ‘பூ’ வைப் ‘பூவர்’ என்றாரு முளர்.

ஒன்னறப் பிறிதொன்று போலுமெனப் பிழைபடக் கருதலானும், இஃது இவ்வாறிருந்தால் அழகுடைத்தாமெனக் கருதலானும், தமிழ்மக்கள் சொற்களை மாற்றி வழங்குவர். இலக்கணமில்லையாயினும், இலக்கண முடையது போல் அடிப்பட்ட சான்றோராலே தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்ற ‘இலக்கணப் போலி’யும் இக்கருத்துக்கள் பற்றியே யுண்டாயிற்றுப் போலும். ‘இல் முன்’ என்பதை ‘முன்றில்’ என்பதும், ‘மரநுனி’ என்பதை ‘நுனிமரம்’ என்பதும் இவற்றிற்கு முறையே உதாரணமாம். ‘முற்றம்’ என்ற சொல்லொடு போலி யொப்புமை கொண்டு ‘இல்முன்’ ‘முன்றில்’ எனக் திரிக்கப்பட்டது. ‘நுனிமரம்’ என்று கூறுதற்கண் உச்சாரண சுகமுண்மை காண்க.

தமிழ் மக்களது நாகரிகநிலை முதிர்ச்சிக் கேற்றபடி, தமிழ்ப்பாஷையும் முதிர்ச்சி யடைதல் வேண்டும். நன் மக்களிடத்தே சொல்லத்தகாத சொல்லை, அவ்வாய்பாடு மறைத்துப் பிறவாய்ப்பாட்டாற் சொல்லும் ‘இடக்கரடக்கல் வழக்கு’ம், மங்கலமில்லாததை யொழித்து மங்கலமாகக்கூறும் ‘மங்கலவழக்கு’ம் நாகரிகநிலை முதிர்ச்சியா னேற்பட்டனவாம். ‘ஆப்பி’ என்ற சொல் நாகரிக நிலை நன்கு முதிராத காலத்திலெழுந்து பின்னர் நன்மக்களா னிறுதி குறுக்கப் பட்டது.

இராஜ்யங்களின் மாறுபாட்டால் பாஷைகளும் வேறு படுதலுண்டு. உதாரணமாகத், தமிழ் மொழியின் கண்ணே , மகம்மதிய அரசு ஒங்கியதனால் எத்துணையோ ‘இந்துஸ்தானி பாஷை’ச் சொற்கள் இடம் பெறுவனவாயின உதாரணமாகச் ‘சலாம்’ ‘சபாசு’ என்ற சொற்கள் தமிழிலக்கியங்களினு மேறி விட்டன.

“சுராதிபமா திமாலய னுலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே”

என்று, அருணகிரி நாதர் தமது ‘திருப்புகழ்’ நூலின்கட் கூறியதும்,