பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

பனஞ் செய்தனர். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் இவ்விருவரும் ஒரே காலத்தினர். சுந்தரமூர்த்திநாயனார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினிறுதியிலிருந்தவர். இம்மூவரும் பாடிய ‘தேவாரப்பதிகங்கள்’ கணக்கில. இத்தேவாரப் பதிகங்களெல்லாம் இசைத்தமி ழிலக்கியங்களாமாறு காண்க. வேத சாரத்தைத் தொகுத்து தேவாரக்கலத்திலே பெய்துவைத் திருக்கின்றனர் மூவருமென்பதே ஆன்றோர் துணிபு. இனி வைணவ சமயகுரவர்களான ஆழ்வார்களுட் பலர் அருமையான திவ்யப் பிரபந்தங்கள் யாத்தனர். சைவர்கள் தமது சமயநூல்களைப் பன்னிரண்டு திருமுறைகளாக வகுத்தனர். வைணவர்கள் தம்முடைய சமயநூலகளை ‘நாலாயிரப் பிரபந்தம்’ எனத் தொகுத்தனர்.

ஏறக்குறையக் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் எழுந்து விளங்குவதாயிற்று ஓர் அரிய நூல். அது ‘கல்லாடம்’ என்பது. இஃது அகப்பொருட் டுறைகளுள் நூற்றினை யெடுத்து விளக்கிக்கூறிச் செல்லுமுகத்தால் அநேக அரிய விஷயங்களையு முடன் கூறாநின்றது. உயர்வுங் கம்பீரமும் வாய்ந்த நடையும் படைத்துரையாற்றலும் நவின்றோர்க் கினிமையுங் காட்டி யொளிர்வது. ‘நன்னூல், நேமிநாதம்,’ நாற்கவிராஜ நம்பியியற்றிய ‘அகப்பொருள் விளக்கம்,’ ஐயனாரிதனார் இயற்றிய ‘புறப்பொருள் வெண்பாமாலை,’ ‘யாப்பருங்கல விருத்தி,’ ‘யாப்பருங்கலக் காரிகை’ என்ற நூல்களெல்லாம் தோன்றியதிக் காலமேயாம்.

இதன்மேற் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலிருந்த குலோத்துங்கச் சோழனவைக்களத்தை யலங்கரிதத்தார் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் முதலாயினார். முன் சங்கத்தார் காலத்திலே ஓர் ஔவையார் இருந்தன ரென்பதன்றி இக்குலோத்துங்கன் காலத்தும் ஓர் ஔவையார் இருந்தனரென்ப. இருவர் ஔவையாரெனக் கொள்ளலே யேற்புடைத்தாம். கம்பர் வடமொழியினின்றும் இராமகதையைக் கற்றுணர்ந்து, தமது சுதந்திர யூகமுங் கற்பனா சக்தியுங்காட்டி, விசேஷக்கருத்து நலம் வாய்ப்ப, பத்தழகும் பாங்குடனமைய ஒன்பான் சுவையு மொருங்கே யொழுகப் பதினாயிரஞ் செய்யுட்களில் ‘இராமாயணம்’ செய்து முடித்தனர். அஃது அவர் பெயரொடுங் கூட்டிக் ‘கம்ப ராமாயணம்’ என்று இன்றும் வழங்குகின்றது. அஃது என்றும் வழங்கும் என்பதில் ஐயுறவில்லை. கம்பர் இராமாயணத்தைத் தவிர்த்துச் சில சிறு நூல்களுஞ் செய்துளர். அவை இராமாயணம்போல அத்துணை மதிக்கப்படுவன வல்ல. ஒட்டக்கூத்தர் இராமாயணத்தின் பிற்பகுதியாகிய ‘உத்தரகாண்ட’த்தை இரண்டாயிரஞ் செய்யுட்களில் யாத்து முடித்துக் கம்ப ராமாயணத்தைப் பூர்த்தி செய்தனர். தம்மையாதரித்த குலோத்துங்கச் சோழன்மீது அகப்பொருட்டுறைகளா லமைந்த ‘கோவை’யொன்றும் ‘உலா’வும் ‘அந்தாதி’யுஞ் செய்தனர்.இவர் செய்த ‘குலோத்துங்கச்சோழன் கோவை’ யென்பது சொன்னயமும் பொருணயமுங் கனிந்து கற்பனைக் களஞ்சியமா யொளிர்கின்றது. புகழேந்திப் புலவர் புகழெல்லாம் ‘நளவெண்பா’