பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

257

எனவே தமிழ்ப் பாஷையின் ஒழுகலாற்றை மாற்றுதல் எவராலும் முடியாததாம். ஆதலால் தமிழ்ப் பாஷையின் ஒழுகலாறு இன்னதென்று உய்த்துணர்ந்துகொண்டு, ஆற்று வெள்ளத்தின் வேகத்துடன் செல்வான்போல, அவ்வொழுக லாற்றினை யொட்டி அதனோடியைந்து தமிழ்ப் புலவருந் தம் பாஷையைச் சீர் திருத்திக் கொள்ளவேண்டும்.

இனிச் சிலர் ‘புதியன புகுதல் தமிழிற்கு ஒக்குமாயினும் பழையன கழிதல் ஒவ்வாது’ என்ற கொள்கையுடையார்போலத் தாம் எழுதும் நூல்களின்கண் பழையன கழிந்த சொற்களிலும் சொல்லுருவங்களிலும் அளவிறந்தவற்றை வழங்குகின்றனர். இவர் செயல் தம்முடைய வல்லமை காட்டிப் படிப்போரை மருட்டித் தம்மைப் பற்றி அவரகள் நல்லெண்ணம் கொள்ள வேண்டுமென்று நினைத்துச் செய்ததாகக் கருதப்படும். படலால் இவர் தாம் எண்ணியபடி நன்கு மதிக்கற்பாடு பெறுவதில்லை. சாமானிய சனங்கள் இன்னார் நூல்களைத் தொடவும் அஞ்சுகின்றனர். மேலும் இங்ஙனமெழுதுவார் சுவை போலிச்சுவை யெனப் பலரும் ஒதுக்குவர்.

‘தமிழ்மொழியின் வரலாறு’ எனத் தலைப்பெயரிட்டு எமது ஆராய்ச்சிக்கண் நேர்ந்த பல விஷயங்களையும் பத்து உபந்நியாசங்களிற் கூறி ஓராற்றான் முடித்தாம். தமிழ்மொழியும், தமிழ் மக்களும் நீடூழி வாழ்க.

வாழ்த்து.

கலி விருத்தம்.

ஐயர் வாழிய வண்ணலும் வாழிய
செய்ய நற்றமிழ் தேமெங்கு மோங்குக
துய்ய கோமகன் றோமின் றிலங்குக
தெய்ய யாமுரை செய்ந்நூ லொளிர்கவே.

தமிழ் மொழியின் வரலாறு

முற்றிற்று.




33