பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


உறுதி மொழி

தான்வாழத் தமிழ்கற்றுக்

கொண்ட கேடன்

தமிழ்வளர்ச்சிக் கிடையூறு

செய்கின் றானால்,

வான்மீதும் தமிழுயர

வேண்டு மானால்

வண்மொழியைக் கற்கவரும்

யாவ ரையும்,

"நான்வாழ வகைசெய்யும்

நற்றா யேநின்

நலத்திற்கோர் இடையூறு

வருங்கா லத்தில்

நான்மாள நேர்ந்தாலும்

அஞ்சா துன்றன்,

நலங்காப்பேன்" எனஉறுதி

பகரச் செய்வீர்!

ー★ー