பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

வல்லிக்கண்ணன்


திருவதிகைத் தலத்திடத்தும், திலகவதியம்மையாரிடத்தும் நம் சுவாமிகளுக்கு நிறைந்த பற்று உண்டு. 1938 வாக்கில் ஆலயத் திருப்பணிகள் நிறைவேறிவிட்டன. பண்ணுருட்டி வணிகப் பெருமகனார் ஆ. அ. குப்புசாமி செட்டியார் 45 ஆயிரத்திற்கு அதிகமாகச் செலவிட்டார். பாண்டியன் கோபுரத்தையும் புதுப்பித்தார். ஆனால் கும்பாபிஷேகத்தை நடத்தாமல் காலங்கடத்திவந்தார். வழக்கம் போல் திருவதிகை சென்ற சுவாமிகள், இராசகோபால்செட்டியாரை வருவித்துத் 'தாங்கள் முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்திவைக்க' எனக் கூறினார். அவரும் சுவாமிகள் கட்டளையச் சிரமேல் தாங்கி 23-6-40ல் சிறப்புறக் கும்பாபிஷேகத்தை நிறைவேற்றிவைத்தார். அதன் அங்கமாகச் சுவாமிகள் தலைமையில் சைவ மாநாடு ஒன்றும் 3 நாள் நடந்தது. திருப்பெருந்துறை - மடாலயத் தலைவர் நமசிவாயத் தம்பிரானும், திருவதிகை குமாரசாமித் தம்பிரானும், சுவாமிகளின் அன்பர், சென்னை திருவொற்றியூரானடிமை - திரு. த. ப. இராம சாமிப் பிள்ளையர்களும் முன்னின்று கும்பாபி ஷேகத்தைச் சிறப்புற நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேக நினைவாகத் தல மான்மியம் வெளியிடப்பெற்றது. அதை உரை நடையில் எழுதியவர் சுவாமிகளின் மாணவர் சோழவல்லி ப. பாலசுந்தர நாயனார். அவர் அங்ஙனம் வெளியிடுவதையறிந்த சுவாமிகள் திலகவதியம்மையார் பேரில் சில பாட்டுகள் இயற்றித் தந்து சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆறு விருத்தப் பாக்களும் ஒரு வெண்பாவுங் கொண்ட திலகவதி அம்மை துதி பிற்சேர்க்கையாக இணைக்கப்பெற்றுள்ளது.

அடியர்களுக்காகச் சுவாமிகள் கொண்ட விழாக்கள்

அறுபானாண்டு நிறைவு :

சுவாமிகளுக்கு அறுபது ஆண்டுகள் நிரம்பின. மாணவர் பலரும் அப்பெரு நாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமெனச் சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டனர். சுவாமி ளும் அடியவர் பொருட்டு அதனை யேற்றுக் கொண்டனர்.

ஸ்ரீமுக ஆண்டு வைகாசிமூல நாள் (1933, மே ௴) திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம் விழாக் கோலம் பூண்டது. மாணவர்களும் அன்பர்களும் திரண்டனர். வெளியூரினர் பற்பலர் குழுமினர். சுவாமிகள் அதிகாலை