உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வல்லிக்கண்ணன்

தங்கள் தீவினை வசப்பட்டு நன்றியை மறந்து மறம்செய்து தவறிழைத்துப் பின்னர் அரச தண்டத்துக் குட்பட்டுச் சரணாகதியென வந்த காலத்து நமது சுவாமிகள் தலைநாளிற் காட்டிய அன்புடனேயே அவர்களை ஏற்று மன்னித்த தெய்வச் செயல்களைப் புலிசைவாசிகளும் வேறு பல நண்பர்களும் நன்கறிவர். குறளர் ஒருவர் "கைதவமறியாச் செய்தவ முடையோய் நினது கடிதங் கண்டாம்” எனத் தொடங்கும் குறும்புக் கடிதமெழுதியதற்கு வெகுளாது அவரிடமிருந்து ஒரு மகாநாட்டைத் தலைமை வகித்துச் செம்மையாக நடத்திக் கொடுத்துப் பிறகு பத்தாண்டுகள் கழிந்த பின்னர் அன்னார் ஒரு கழகத்துக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்க்க வேண்டிய இச் செய்தியை வெளியிட்டு அன்னாருடைய உண்மை நிலையைப் பலர் அறியும் படி வெளிப் படுத்தியதைக் கண்டு அன்பரணை வரும் வியப்பெய்தினர். 1927௵ சென்னையில் சைவசித்தாந்த மகா சமாஜத்தின் கீழ்ச் சொற்பொழிவாற்றிய ஹைகோர்ட்டு ஜட்ஜி ராமேசம் அவர்கள் தமது சொற் பொழிவில்சுவாமிகள் திருவதனத்தில் சாந்தம் நிறைந்த பொலிவு காணப்படுகிறதென்று வாயாரப் புகழ்ந்து கூறியதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

8. சுவாமிகள் இக்காலத்திய உலகப் போக்கை நன்கறிந்து அதற்கேற்பப் பிற மக்களோடு ஒழுகும் பேராற்றலுடையவர்கள். இக்காலத்திய துறவிகளில் இரு வகையினரை எளிதிற் காணலாம். பலர் நீறில்லாப்பாழ் நெற்றிராய் நாடோறும் முகக்ஷவரம் செய்த பொலி வுடையராய் உட்சட்டை மேற்சட்டை காற்சட்டை உடற்சட்டை மேற்போர்வை முதலிய ஆடைப் பெருக்குடையராய்ச் சமயப் பற்றை மட்டும்விட்டு ஏனைய பற்றுக்களை விடாதவராய்க் காணப்படுகின்றனர்; வேறு சிலர் ஜோசியம் சொல்லுதல், மருந்து தருதல், மந்திரித்தில் முதலிய பல தொழில்கள் செய்து செல்வர்களையடுத்து அவர்களுடைய பரிவார நிழலில் வாழ்கின்றனர். வேறு பல வகையான ஒழுக்கமுடைய கல்லாடை புனைந்த கள்வர்களுமுண்டு. இவர்களெல்லாம் உலகத்தோடு ஒட்ட ஒழுகுவோராகத் தங்களைக் கூறிக்கொள்வதண்டு. அறிவுபடைத்த உலகம் இவர்கள் ஒழுக்கத்தைத் துரும்பாக மதிக்கும். சுவாமிகள் இத்தகைய துறவிகளை நோக்க வேறொரு பிறவி, வேறொர் உலகத்தவர்என்றே கூறல்வேண்டும். இவ்விருபதாம் நூற்றாண்டில் காலம் தாழ்க்காது காரியங்களைச் செய்யும் கொள்கை வேரூன்றி வருகிறது. நமது சுவாமிகள் குறித்த கால வெல்லை