பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. இலக்கியங்களில் தில்லை

இறைவன் திருவருள் வெள்ளத்தில் திளைத்த அருளாளர்களால் பாடிப் பரவப் பெற்ற பழம்பதி களைப் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்று பாராட்டுவர். அத்தகைய பாடல் பெற்ற தலங்களுள் பழமையும் பெருமையும் வாய்ந்த தலம் தில்லையாகும். சைவ நன்மக்களின் தெய்வத் திருக்கோவிலாகத் திகழும் தில்லைப்பதியினைப் புகழ்ந்து சொல்லாத சைவக் கவிஞர் இலராவர்.

திருவாசகத்தில் தில்லை

இறை மணத்தாலும் கலைகலத்தாலும் அன்றும் இன்றும் தலைசிறந்த தலமாக விளங்கும் தில்லைக்கு மாணிக்கவாசகரை வாவென்று வண்ணப் பணித்து வான்கருணை செய்தருளினான் இறைவன். அங்கு மாணிக்கவாசகர், சிவபெருமானது அருட்கோலத்தைக் கண்ணுரக் கண்டு களித்தார். அந்த உண்மையைத் தாம் பாடிய திருவாசகத்தில் ‘கண்ட பத்து’ என்னும் பதிகத்தில் ‘கண்டேன்! கண்டேன்!’ என்று கூறி இன்புறுகின்றார். ‘ஐம்பொறிகளின் வயப்பட்டு அழிவதற்குக் காரணமாகி மீளமுடியாத நரகில் வீழவிருந்த என்னைத் தில்லைக்கு வருமாறு இறைவன் பணித்தான்: அவண் சென்றதும் அவ்இறைவன் என் சிங்தையைத்’ தெளிவித்துச் சிவமயமாக்கினன் , என்னை அடிய கைவும் ஏற்றுக்கொண்டான் ; இந்த நிலை, எனக்கு அந்தமிலா ஆனந்தத்தைத் தந்தது ; இத்தகைய ஆனந்தத்தை நான் அணிகொள் தில்லையில் கண்டேன் : அனைத்துலகும் தொழும் அருமைவாய்ந்த தில்லை