பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. தமிழ் வளர்த்த நெல்லை

மதுரை மாநகரில் பாண்டியர்கள் தமிழை வளர்த்தற்கு அமைத்த கடைச்சங்கம் மறைந்த பிறகு தமிழகத்திலுள்ள பல நகரங்களிலும் வாழ்ந்த வள்ளல் களும் குறுநில மன்னர்களும் தமிழைப் பேணி வளர்த்தனர். ஆங்காங்குத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சமயத்தைக் காத்தற்கென்று முன்னேர்களால் நிறுவப்பெற்ற அறநிலையங்களாகிய மடாலயங்களும் சமயத் தொடர்புடைய தமிழ்ப் பணியை ஆற்றின. அவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும் தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் தலைசிறந்து நிற்பனவாகும்.

ஈசான தேசிகர்

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த கிளை மடம் ஒன்று நெல்லைமாககரில் உண்டு. அது மேலைத் தேர் வீதியில் அமைந்துள்ளது. அத் திருமடத்தை ஈசான மடம் என்றும் இயம்புவர். அதில் சுவாமிநாத பண்டிதர் என்னும் தமிழ் முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை ஈசான தேசிகர் என்றும் கூறுவர். அதனாலேயே இவர் தங்கியிருந்த திருமடம் ஈசான மடம் எனப்பட்டது. இவர் இலக்கண இலக்கியப் புலமை சான்றவர். வடமொழிப் புலமையும் வாய்க்கப் பெற்றவர். இவர் நெல்லையில் வாழ்ந்த சைவச் சிறார்க்குச் செந்தமிழ் அறிவை ஊட்டி வந்தார். இவர் பால் தமிழ் பயின்றவர்கள் இலக்கணப் புலமையிற் சிறந்து விளங்கினர். நன்னூல் என்னும் இலக்கணச் சின்னூலுக்கு உரைவரைந்த சங்கர நமச்சிவாயர்