பக்கம்:தமிழ் விருந்து.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம் 101 இவ்வாறாக எலிமலை என்ற பெயர் அம் மலைக்கு நிலைத்துவிட்டது. இனி, மலையாளத் தாக்கோலைச் சிறிது பார்ப்போம் : பூட்டைத் திறக்கும் கோல் தாக்கோல் எனப்படும். நிலைப் பூட்டுக்குத் தாழ் என்று பெயர். இக் காலத்தில் அது தாழ்ப்பாள் என வழங்குகின்றது; 'ஒட்டக்கூத்தன் பாட்டுக்குத் இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் வாசகம் தமிழ் நாட்டில் உண்டு. ஆயினும் தாழ் என்றாலே போதும். திருவள்ளுவர் அன்பின் தன்மையைக் கூறுமிடத்து, "அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்" என்று பாடினார். தாழைத் திறக்குங்கோல் மலையாளத் தில் தர்ழ்க்கோல் என்றும், தமிழில் திறவுகோல் என்றும் குறிக்கப்படுகிறது. இந் நாளில் நாகரிகத் தமிழ்நாடு திறவுகோலைக் கைவிட்டுச் சாவியைப் பற்றிக்கொண்டது. சாவி என்பது போர்ச்சுகீசியப் பதம்; அதற்கு மேல் 'சீ' யென்னும் ஆங்கிலப் பதமும் இப்போது 'அடிபடுகின்றது. . பழந்தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களிற் சிலவற்றை இன்றும் மலையாள தேசத்திற் காணலாம். கல்யாணத்தில் மணமகன் வீட்டார் கொடுக்கும் புடைவையைப் பெண்ணுக்கு உடுத்தும் வழக்கம் தமிழ் நாட்டில் உண்டு. அப் புடைவையைக் கூறைப்புடைவை என்பார்கள். கூறை என்றாலும், புடைவை என்றாலும் பொருள் ஒன்றே. முற்காலத்தில் புடைவை நெய்யப்பட்ட ஓரிடத்திற்குக் கூறை நாடு என்றே தமிழர்