பக்கம்:தமிழ் விருந்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}{} தமிழ் விருந்து மலையின் பெயர். பாண்டி நாட்டில் பொதியில் என்னும் மலை அமைந்திருத்தல் போல, மலையாள நாட்டில் எழில் என்னும் மலை விளங்கிற்று. அம் மலையை ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான். அவனைக் கண்டு பரிசு பெறக் கருதிய ஒளவையார் காடும் நாடும் கடந்து சென்றார். மாளிகையை அடைவதற்கு முன்னே அந்திமாலை வந்துவிட்டது. ஆயினும், எங்கும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. இரவு, பகலாகவே காணப்பட்டது. அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தான். அங்கே சென்றார் ஒளவையார். அரசன் ஒன்றும் பேசவில்லை; பாராமுகமாய் இருந்தான். அவன் முன்னே நின்று கொண்டு ஒரு தமிழ்ப் பாட்டு இசைத்தார் ஒளவையார். அப்பொழுதும் அவன் வாய் திறக்கவில்லை. பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், சபை நடுவே இருந்த அரசனது தன்மையை ஒரு பாட்டில் அமைத்துப் பாடினார். "இருள்தீர் மணிவிளக்கத்(து) ஏழிலார் கோவே குருடேயூ மன்றுநின் குற்றம்-மருள்தீர்ந்த பாட்டும் உரையும் பயிலா தனஇரண்டு ஒட்டைச் செவியும் உள” என்று அவர் பாடிய பாட்டில் ஏழில் என்னும் மலை குறிக்கப்படுகின்றது. ஏழில் என்னும் பதத்திலுள்ள ழகரம் நாளடைவில் நழுவிற்று. ஏழில்மலை எலிமலை யாயிற்று. அம் மலையில் அரசு புரிந்த மன்னர் குலம் மூசிக வம்சம் ஆயிற்று. மூசிக வம்சத்தைக் குறித்து வட மொழியில் ஒரு காவியமும் எழுதப்பட்டது.