பக்கம்:தமிழ் விருந்து.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம் 93 தீர்க்கும் மருந்தாக அமைகின்ற்து. மலையாளத்தில் தகப்பனைத் தமப்பன் என்கின்றார்கள். ஆகவே, தம் அப்பன் என்பது தமப்பன் என்றாகித் தமிழில் தகப்பன் ஆயிற்றென்று அறிந்துகொள்கின்றோம். இன்னும், வண்ணான் என்ற சொல்லைப் பார்ப்போம் : அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் தொழிலே வண்ணான் தொழில். மலையாளத்தில் வண்ணானை மண்ணான் என்பார்கள். மண்ணு என்ற சொல் கழுவு என்ற பொருளில் தமிழில் வழங்குகின்றது. "மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரு மாகாது அதனருகே சிற்றுறல் உண்ணிரு மாகி விடும்" என்ற பாட்டில் மண்ணிர் என்னும் பதம் கழுவும் தண்ணிர் என்ற பொருளில் வந்துள்ளது. மண்ணுதற்கு உதவும் நீரை மண்ணிர் என்றார் கவிஞர். ஆகவே, ஆடைகளின் அழுக்கைக் கழுவிப் போக்குகிறவனை மண்ணான் என்று குறிப்பது பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. மண்ணான் என்பது தமிழில் வண்ணானாகத் திரிந்தது போலும். - இனி, ஒரு மலையின் பெயர் மலையாளத்தில் அடைந்த மாற்றத்தைப் பார்ப்போம் : மலைய்ாள தேசத்தில் கடற்கரையின் அருகேயுள்ள ஒரு மலை எலிமலை என்னும் பெயர் பெற்றுள்ளது; ஆங்கிலத்தில் அதனை (Rat Mountain) என்று மொழி பெயர்த்து வழங்குகின்றார்கள். அம் மலையின் சரித்திரம் சென்னையிலுள்ள அம்பட்டன் வாராவதியின் கதையை ஒத்திருக்கின்றது. எழில் என்பது அம்