பக்கம்:தமிழ் விருந்து.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ - தமிழ் விருந்து குறிக்கின்றார்கள். ஆதலால் அரி என்பது அரிசியின் ஆதி வடிவம் போலும் மற்றொரு சொல்லைப் பார்ப்போம் : எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச் சொல் என்பு என வழங்குகின்றது. "அன்பின் வழியது உயிர்திலை அஃதிலார்க்கு என்பு:தோல் போர்த்த உடம்பு" என்னும் திருக்குறளில் என்பு அமைந்துள்ளது. கன்னடத்தில் எலும்பை எலு என்கிறார்கள். எலும்பின் ஆதி திலையினை நாடும் பொழுது மலையாளம் வந்து உதவுகின்றது. எல் என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும். அதுவே கன்னடத்தில் எலு என்றாயிற்று, தமிழில் விகுதி பெற்று என்பு என்றும், எலும்பு என்றும் அமைந்தது. இனி, பெற்றோரையும் உற்றோரையும் குறிக்கும் சில தமிழ்ப் பதங்களைப் பார்ப்போம் : பிதாவை நாம் தந்தை யென்றும், தகப்பன் என்றும் கூறுவோம்; அண்ணனைத் தமையன் என்போம்; இளையவனைத் தம்பி என்போம்: மூத்து சகோதரியைத் தமக்கை என்றும், இளைய சகோதரியைத் தங்கை என்றும் வழங்குவோம். தந்தை. தகப்பன், தமையன், தமக்கை, தம்பி, தங்கை-இச் சொற்களின் பிறப்பு முறையில் ஒர் ஒற்றுமை இருக்கக் காண்கிறோம் அல்லவா? தம் என்ற சொல்லின் அடிப்படையாக இப் பதங்கள் பிறந்தன வாகத் தோன்றுகின்றன. ஆனால், தகப்பன் என்னும் பதத்தில் மட்டும் ககரம் எப்படி வந்தது என்று சிறிது திகைக்கின்றோம். மலையாளம் அம் மயக்கத்தைத்