பக்கம்:தமிழ் விருந்து.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம் 97 இக் காலத்தில் தமிழும் மலையாளமும் தனித்தனி மொழிகளாகக் கருதப்படுகின்றன. எனினும் இவ்விரு மொழிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. பேச்சுத் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டுகின்ற சில சொற்களைப் பார்ப்போம் : ஒன்று என்பதைப் பேச்சுத் தமிழில் ஒன்னு என்பர். மூன்று என்பதை முனு என்பர். மலையாளமும் இவ்வாறே ஒந்து, மூது என்று வழங்குகின்றது. இன்னும் பன்றியைப் பன்னி என்றும் கன்றைக் கன்னு என்றும் தமிழில் வழங்குவது போலவே மலையாளமும் வழங்குகின்றது. குன்று என்பது பேச்சுத் தமிழில் குன்னு என்றாகும். தொண்டை நாட்டிலுள்ள குன்றத்துரைக் குன்னத்துரர் என்றும், நீலகிரி மலையிலுள்ள குன்றுாரைக் குன்னூர் என்றும் கூறுகின்றோமல்லவா? மலையாளத்தில் குன்றைக் குன்னு என்றே வழங்குகின்றார்கள். இன்னும், ஒன்பதை மலையாளத்தில் ஒம்பது என்றும், ஐம்பதை அம்பது என்றும் கூறக் காண்கிறோம். பல தமிழ்ச் சொற்களின் பழைய வடிவம் மலையாளத்திலே விளங்குகின்றது. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு அரிசி உண்டு. பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரீக்கர்கள் அதனை அருளபா என்கிறார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (lice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழமை வாய்ந்ததாயினும், பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் அரி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை அரி என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/99&oldid=878618" இலிருந்து மீள்விக்கப்பட்டது