பக்கம்:தமிழ் விருந்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியும் பிற மொழியும் - கன்னடம் 11; புலி என்னும் சொல் பழங் கன்னடத்தில் உண்டு. அது புதுக் கன்னடத்தில் ஹாலி ஆயிற்று. வேங்கைப் புலியைத் தமிழில் பெரும் புலி என்பர். அதற்கு நேரான கன்னடப் பதம் பொப்புலி என்பது. ஆந்திர தேசத்திலுள்ள பொப்புலி என்ற ஊர்ப்பெயரின் பொருள் பெரும் புலி என்பதேயாம். தெலுங்கிலும் கன்னடத்திலும் பல சொற்கள் இவ்வாறு தேய்ந்து வழங்கக் காண்கின்றோம். கன்னடத்திலும் பருப்பு பப்பு என்றும், மருந்து மத்து என்றும், எருமை எம்மே என்றும், பருத்தி பத்தி என்றும் வழங்கப்படுகின்றன. இன்னும் சில கன்னடப்பதங்களில் முதலில் உள்ள சகரம் ககரமாகத் திரிந்துள்ளது. தமிழில் செவி என்பது கன்னடத்தில் கி.வி. அவ்வாறே செவிடு என்பது கிவிடு; செந்தளிர் என்பது கெந்தளிர் செம்பருத்தி என்பது கெம்பத்தி. இனி, தமிழ்ச் சொற்களின் முதலில் உள்ள வகரம் பகரமாக மாறியிருத்தலைப் பல கன்னடப் பதங்களிற் காணலாம். வடுகர் என்பது படகர் என்றாயிற்று. வீடு என்பது பீடு. வீதி என்பது பீதி, வில் என்பது பில்லு. வேர் என்பது பேரு. இத் தகைய மாற்றங்களை உணர்ந்து கொண்டால் தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கு விளங்கும். கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடைய மொழி துளுவம். ஆயினும் கன்னடத்தில் காணப்படாத சில சொற்கள் தமிழிலும் துளுவத்திலும் வழங்குகின்றன. அத் தகைய சொற்களில் ஒன்று கொக்கு தமிழில் கொக்கு என்றும், துளுவத்தில் குக்கு என்றும் வழங்கும்