பக்கம்:தமிழ் விருந்து.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邯2 தமிழ் விருந்து சொல் மாமரத்தைக் குறிக்கும். இச் சொல்லைச் சிலேடையாக வைத்துக் குற்றாலக் குறவஞ்சியாசிரியர் முருகன் பெருமையைக் கூறுகின்றார். முருகப் பெருமான் முதல் வேட்டைக்குப் புறப்பட்டாராம். ஒரு கொக்கை அடித்தாராம். " மீறும் இலஞ்சுக் குறத்தியைக் கொண்டசெவ் வேட்குறவன் முதல் வேட்டைக்குப் போனநாள் ஆறுநாட் கூடிஒரு கொக்குப் பட்டது." என்று பாடுகின்றான் மலைக் குறவன். முருகன் அசுரர் தலைவனாகிய சூரனோடு போர் தொடுத்தார்; ஆறு நாள் அரும்போர் செய்தார். மாயையில் வல்ல சூரன் மறைந்து ஒரு மாமரமாக நின்றான். அம் மாமரத்தை வேலால் எறிந்து வீழ்த்தினார் முருகன். இச் செயலைக் கொக்கு வேட்டையாடினார் குமரன் என்று குறவன் நயம்பட உரைத்தான். இவ்வாறு தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையை ஆராயும் பொழுது தென்னிந்திய மொழிகளெல்லாம் ஒர் இனம் என்பது தெளிவாகும். அவற்றுள்ளே தமிழ் மொழி காலப் பழமையும் செம்மையும் வாய்ந்த தென்பதும் செவ்விதின் விளங்கும். 15. இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை ஒரு செழுமையான சோலையில் பலவகைப்பட்ட மரங்கள் விளங்குகின்றன. சில மரங்களின் கிளைகளி லிருந்து விழுதுகள் தரையை நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில விழுதுகள் தரையில் ஊன்றித் தனித்தனி மரங்களாகத் தழைத்துள்ளன.