பக்கம்:தமிழ் விருந்து.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை 霄3 இத்தகைய சோலையைப் பார்க்கின்றான் ஓர் இயற்கை நூற்புலவன்; ஒவ்வொரு மரத்தின் போக்கையும் தாக்கையும் உற்று நோக்குகின்றான்; அவற்றின் தன்மையை ஆராய்ந்து எழுதுகின்றான். இச் சோலையைப் போன்றதே இலக்கிய உலகம். இலக்கிய உலகத்தில் பலவகைப்பட்ட மொழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் உள்ளத்தை அள்ளும் தெள்ளிய பாட்டும் உரையும் உண்டு. சிறந்த தாய்மொழிகளினின்று பிறந்த சேய்மொழிகள் தனி மொழிகளாகத் தழைத்தலும் உண்டு. இவற்றை யெல்லாம் ஆராய்ந்து ஒவ்வொரு மொழியின் தன்மையையும் எழுதிக் காட்டும் நூலே இலக்கணம் எனப்படும். அதனை வியாகரணம் என்பர் வடமொழியாளர். இலக்கணம் அமையப்பெறாத மொழிகள் வரம்பில்லாத வயல்களை ஒக்கும். பழமையும் பண்பும் வாய்ந்த பசுந்தமிழை இலக்கண வரம்புடைய மொழியென்று பாராட்டினார் பரஞ்சோதி முனிவர். " கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ்ஏனை மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ” என்று முனிவர் இறுமாந்துரைத்தார். 'ஒரு மொழியின் பண்புகளை அதன் இலக்கணம் நன்கு பாதுகாக்கும்' என்னும் உண்மைக்குத் தமிழிலக்கணமே தக்க சான்று. தொன்றுதொட்டுப் பல இனத்தார் தமிழ் நாட்டிற் போந்து தமிழரோடு