பக்கம்:தமிழ் விருந்து.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

事露 தமிழ் விருந்து கலந்துள்ளார்கள். அவ் வினத்தாருடன் வந்த பல மொழிகளும் தமிழ் மொழியோடு கலந்திருக்கின்றன. ஆதியில் ஆரியர் வந்தனர். அவர் மொழியாகிய ஆரியத்தோடு தமிழ் அளவளாவிற்று. அப்பால் மகமதியர் வந்தனர்; அவருடன் வந்த அரேபியத்தோடு தமிழ் உறவாடிற்று சென்ற முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தோடு தமிழ் பழகிக்கொண் டிருக்கின்றது. ஆயினும், ஆதியில் வந்த ஆரியமாவது, இடைக் காலத்தில் வந்த அரேபியமாவது, பிற்காலத்தில் வந்த ஆங்கிலமாவது தமிழின் நீர்மையைக் கெடுத்துவிட வில்லை. தமிழின் உருவத்தைக் குலைத்துவிடவில்லை. இதற்குக் காரணம் தமிழ் இலக்கணமே. பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கலாகாது என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை; ஆனால், அச் சொற்கள் தமிழ்க்கோலம் பூண்டு தமிழிலே கலந்து கொள்ளுதல் வேண்டும் என்று விதித்தது. பிற நாட்டான் ஒருவன் தமிழனாகக் கருதப்பட வேண்டுமானால் அவன் நடை உடை பாவனைகள் எல்லாம் தமிழ் நாட்டாரைப் போல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறே பிறமொழிச் சொற்கள் தமிழோடு கலந்து கொள்ள வேண்டுமானால் அவை தமிழ் ஓசையும் உருவமும் உடையனவாய் வரல் வேண்டும் என்று தமிழிலக்கணம் வரையறை செய்தது. தமிழின் நலங்கருதிச் செய்யப்பட்ட இக் கட்டுப் பாட்டைத் தமிழிலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டது. அதனாலே விளைந்த நன்மையைப் பார்ப்போம்; ராஜா என்ற வடசொல் அரசன் என்ற வடிவத்திலே தமிழில் வழங்கலாயிற்று. லோகம் என்பது உலகம்