பக்கம்:தமிழ் விருந்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தமிழ் விருந்து தன்னந் தனியளாயிருந்த சீதையைத் தன்னுயிரினும் மேலாக மதித்த இராவணன், "பெண்ணெலாம் நீரே யாக்கிப் பேரெல்லாம் உமதே யாக்கித் கண்ணெலாம் தும்கண் ணாக்கிக் காமவேள் என்னும் நாமத்து அண்ணல்எப் வானு மாக்கி ஐங்கனைக் கரியத் தக்க புண்னெலாம் எனக்கே யாக்கி விபரீதம் புணர்த்தி விட்டீர் . என்று பேசுகின்றான். இக் காலத்தில் மரியாதை இன்னும் ஒருபடி உயர்ந்துவிட்டது. ஒருவனை நீர் என்றும், அவர் என்றும் குறிப்பது போதாதென்று நீங்கள், அவர்கள் என்று பேசும் முறை வந்துவிட்டது. ஒருவனைப் பார்த்து, நீங்கள் எப்பொழுது வந்தீர்கள் என்று கேட்பதில்லையா? ஆகவே, நீ, நீர், நீங்கள் ஆகிய மூன்றும் முன்னிலை ஒருமையிலும், அவன், அவர், அவர்கள் ஆகிய மூன்றும் படர்க்கை ஒருமையிலும் வழங்கக் காண்கிறோம். தமிழ் நாட்டில் மரியாதை முறை தெற்கே செல்லச் செல்ல சிறந்து தோன்றுகிறது. இவ்விதம் உண்டாகும் மாற்றங்களை இலக்கணம் நாளடைவில் ஏற்றுக்கொள்ளும். இப்பொழுது சில தொன்மொழிகளின் ஒப்பிலக் ¿EGRILô (Comparative Grammar) GTQp3LILL” (5) Gu(53lašipg!. தொன்று தொட்டு ஆரியத்தையும் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை இந்நாட்டில் உண்டு. எந் நாட்டவர்க்கும் இறைவனாகிய கடவுளையே 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்றார் ஒரு பெரியார். வடமொழிக்கு வியாகரணம் வகுத்த பாணினியும், தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் ஒருவருக் கொருவர் நிகர் என்று கூறினார் ஒரு கவிஞர். இரு