பக்கம்:தமிழ் விருந்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை 147 இலக்கணம் மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்களைப் போல் இடைக்காலத்திலே எழுதப்படாமல் முற்காலத்தில் எழுதப்பட்டமையால் தமிழின் நீர்மையும் திறமையும் பாதுகாக்கப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது. இலக்கணம், மொழியைப் பாதுகாக்கும் என்றால் அஃது ஒர் இரும்புச் சட்டைபோல் இறுக்கி நெருக்கும் என்று எண்ணலாகாது. உயிருள்ள மொழிகள் வளர்ந்து கொண்டே யிருக்கும். பழைய சொற்கள் இறக்கும் புதிய சொற்கள் பிறக்கும். பழைய இலக்கிய மரபுகள் வீழும். புதிய மரபுகள் தோன்றும். இவ்வாறு காலவகையினால் நேரும் திருத்தங்களை இலக்கணம் ஆதரிக்கும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' என்றார் தமிழிலக்கண ஆசிரியராகிய பவணந்தி முனிவர். இதனை இரண்டோர். உதாரணங்களால் உணரலாம். நீ என்பது முன்னிலை ஒருமைப்பெயர். நீர், நீங்கள் என்பன பன்மை. அவன் என்பது படர்க்கை ஒருமை. அவர், அவர்கள் ஆகிய இரண்டும் பன்மை. எத்துணை அருமை வாய்ந்தவனையும் நீ என்றும், அவன் என்றும் குறிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கடவுளையே நீ என்றும், அவன் என்றும் அருள் பெற்ற பெரியோர் குறித்திருக்கிறார்கள். அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ' என்பது தேவாரம். ஆனால், நாளடைவில் மரியாதைக் குரியவரை ஒருமையில் நீர் என்றும், அவர் என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அசோகவனத்தில்