பக்கம்:தமிழ் விருந்து.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு 125 என்பது சேக்கிழார் பாட்டு. காவலன் ஆகிய அரசன் அறத்தைக் காக்கின்றான் என்பது இப்பாட்டால் விளங்குகின்றது. மறப் பகையைப் போக்கி அறப் பயனை நாட்டில் விளைப்பவனே காவலன் என்னும் பெயருக்கு உரியவன். இதனாலன்றோ 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்ற வாசகம் எழுந்தது? 'அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும்' என்பது இந் நாட்டில் நெடுமொழியாக வழங்குகின்றது. நாட்டில் குற்றம் நிகழ்ந்தால் அரசன் உடனே அதனை விசாரணை செய்வான். குற்றம் சாட்டப்பட்டவன் இன்னான் இனியான் என்று பார்ப்பதில்லை; அவனது குலத்தையும் குடியையும் கருதுவதில்லை. உற்றார் உறவினர் ஆயினும் மற்றோராயினும் நீதி செலுத்தும் முறையில் வேற்றுமையில்லை. சோழ நாட்டை ஆண்ட அரசன் ஒரு பகவின் கன்றைக் கொன்ற அரசிளங் குமரனை ஒறுத்து, நீதியின் செம்மையை நிலை நிறுத்தினான். தவறு செய்தவன் தன் மைந்தன் என்று சிறிதும் திகைத்தானல்லன் தன் பெருங் குலத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் எண்ணினாலல்லன்: நீதிநெறி வழுவாமல் குற்றம் செய்தவனை ஒறுத்தலே கடன் எனத் துணிந்தான். இங்ங்னம் நேர்மை குன்றாது மகனை முறை செய்து அறத்தினைக் காத்த மன்னன் பெருமையைத் தமிழ் இலக்கியம் வியந்து போற்று கின்றது. "ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளான் என்பது உணரான் தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமந்தன் தேராழி உறஊர்ந்தான் மதுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்”