பக்கம்:தமிழ் விருந்து.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#25 தமிழ் விருந்து என்று சேக்கிழார் இம் மன்னன் செம்மையை வியந்து பாடினார். இச் சோழனைப் போலவே பாண்டியன் நெடுஞ் செழியனும் நீதி பரிபாலனம் செய்து வந்தான். நீதி முறைக்கு மாறாக இப் பாண்டியன் கண்ணகியின் கணவனாகிய கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்து விட்டான். தண்டனையும் நிறைவேறிவிட்டது. பின்பு கண்ணகி வழக்காடிய பொழுது நீதி தவறியது என்று நெடுஞ்செழியன் அறிந்தான்; அந் நிலையிலேயே தள்ளரிய துயரத்தால் உள்ளம் உடைந்து உயிர் துறந்தான், தான் செய்த பிழையைத் தீர்ப்பதற்குத் தன்னுயிரையே கொடுத்தான். இதனையறிந்த அயல் நாட்டு வேந்தரும் பாண்டியரைப் பாராட்டினர். சேர மன்னனாகிய செங்குட்டுவன் மனம் வருந்தி, "செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன் வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” ான்று பாண்டியரைப் புகழ்ந்தான். எனவே, தவறு செய்தவர் யாவரேயாயினும், தமிழ் வேந்தர் நீ செலுத்தத் தயங்கவில்லை என்பது நன்கு விளங்குகின்றது. நாட்டில் நிகழ்ந்த குற்றங்களை விசாரணை செய்து நீதி செய்தது போலவே, அரசர் குடிகளுக்குள் நேர்ந்த வழக்குகளையும் தீர்த்து முடிவு செய்தார்கள். அரசன் நீதி மன்றத்தில் அமர்ந்து இரு திறத்தார் கூறும் வழக்கையும் நன்றாக மனத்தில் ஏற்று, நீதி வழங்கினான். நீதி மன்றத்தில் சென்று வழக்காடுதலை மன்றாடுதல்