பக்கம்:தமிழ் விருந்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்டதுது 137 என்ற இராமதுாதன் இன்றுகாறும் போற்றப்படு கின்றான். இனி, அன்பர்கள் அனுப்பும் தூதைச் சிறிது அறிவோம் : நலமெல்லாம் நிறைந்த ஒரு நங்கையிடம் நளன் அன்னத்தைத் தூதுவிட்டான் என்பது பழங்கதை சிவனடியார்களாகிய நாயன்மார்களும், திருமா லடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவன்பால் வைத்த இன்ப அன்பைத் தூதின் வாயிலாக வெளியிட் டுள்ளார்கள். மென்னடை யமைந்த அன்னங்களையும், மழலை மொழி பேசும் இளங்கிளிகளையும், தோகையை விரித்தாடும் மயில்களையும், இனிய பாட்டிசைக்கும் குயில்களையும், இன்னும் இவை போன்ற பல பறவைகளையும் பரிந்தழைத்துப் பரமனிடம் தூது விடும் முறையிலமைந்த பாசுரங்கள் பலவாகும். திருச்செங்காட்டங் குடியிலே கோவில் கொண் டருளும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றார் திருஞானசம்பந்தர். "கான்அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும் மீன்இரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய் தேன்அமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய வான்அமரும் சடையார்க்குஎன் வருத்தம்சென்றுரையாயே" என்பது அவர் பாடிய தேவாரத் திருப்பாசுரம். "வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிறார இரை கொள்ளும் இள நாராய் ! சிறுத்தொண்டன் பணி செய்த திருச் செங்காட்டங்குடியில் என்னையாளுடைய தலைவன்