பக்கம்:தமிழ் விருந்து.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 -தமிழ் விருந்து அமர்ந்திருக்கின்றான். அவனைக் காணாது நான் வாடி வருந்துகின்றேன். சடை முடி சூடிய அப் பெருமானிடம் போந்து வின் வருத்தத்தை எடுத்துரையாயோ' என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞானசம்பந்தர் இவ் வண்ணமே திருமாலிடம் நாரையைத் தூது விடுகின்றார் நம்மாழ்வார் : "காதல்மென் பெடைய்ோடு உடன்மேயும் கருநாராய் வேத வேள்வி ஒலிமுழங்கும் தண்திரு வண்வண்டுள் நாதன் ஞாலமெல்லாம் உண்டநம் பெருமானைக் கண்டு பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே " என்று ஆழ்வார் பேசுகின்றார். 'காதலின் சுவையறிந்த கரு நாராய் !! வளமார்ந்த வண்வண்டுர் என்னும் மலை நாட்டுத் திருப்பதியிலே எம்பெருமான் வாழ்கின்றான். அப் பதியை எளிதில் நீ அறிந்து கொள்ளலாம். வேத கீதம் அங்கு முழங்கியு வண்ணமாயிருக்கும். அவ்விடம் சென்று நம் பெருமான் அடிதொழுது நான் படும் பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார். - இனி, புலவர் விடும் துTதின் தன்மையைப் பார்ப்போம். ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்தி முற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலை நகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னனைக் கண்டால் கலிதீரும் என்று கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால், உள்ளே செல்ல முடியவில்லை. காலமோ கார் காலம். போர்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர் பொதுவிடமாகிய அம்பலத்திற்