பக்கம்:தமிழ் விருந்து.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட 氢型 139 போந்து மாலைப்பொழுதில் மனம் வருந்தியிருந்தார். வறுமை நோயால் வாடிப்பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழியாக ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந் நாரையை நயந்து நோக்கித் தம் மனைவியிடம் தூதுவிடத் துணிந்தார் சத்திமுற்றப் புலவர். " நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் நீயுநின் பெடையும் தென்திசைக் குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழிஇப் பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே ” என்று பாடிய பாட்டு உருக்கம் வாய்ந்ததாகும். இனி, கணவனைப் பிரிந்த காதல் மனையாள் கடுந்துயருற்று வருந்தும் நிலையில் தூது விடும் தன்மையைக் காண்போம் : பஞ்சவடியிலமைந்த பர்ன சாலையிலே தன்னந் தனியாயிருந்த சீதையை இராவணன் சாலையோடு கவர்ந்தான்; விமானத்தி லேற்றி இலங்கையை நோக்கி விரைந்தான். நாடும் காடும் நதியும் கடந்து விமானம் பறக்கின்றது. சீதை