பக்கம்:தமிழ் விருந்து.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$40 தமிழ் விருந்து கலங்குகின்றாள். தனக்கு நேர்ந்த துன்பத்தை இராம லட்சுமணர்களிடம் அறிவிப்பார் எவரும் இல்லையே என்று ஏங்குகின்றாள்; மலைகளும் மரங்களும் ஒடுவன போல் தோன்றுகின்றன. மயில்களும் குயில்களும் யானைகளும் மான்களும் தோன்றி மறைகின்றன. அவற்றை நோக்கிச் சீதை பேசுகின்றாள் : " மலையே மரனே மயிலே குயிலே மலையே பினையே களிறே பிடியே நிலையா உயிரே நிலைதே றினிர்போய், உலையா வலியார் உழைநீர் உரையீர்.” என்று வேண்டுகின்றாள். 'மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே ! நீங்களே என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும்' என்று கூறுகின்றாள். அந் நிலையில் விரிந்து பரந்த கோதாவரி யாற்றின் மீது விமானம் விரைந்து செல்கின்றது. அவ்வாற்றைப் பார்த்துச் சீதை பேசுகின்றாள் : " கோதா வரியே குளிர்வாய் குழைவாய் மாதா அணையாய் மனனே தெளிவாய் ஒதா துணர்வார் உழைஒ டினைபோய். நீதான் வினையேன் நிலைசொல் லலையோ " என்று விண்ணப்பம் செய்கின்றாள். இங்ங்னம் அறியும் பொருள்களையும் அறியாப் பொருள்களையும், அசையும் பொருள்களையும், அசையாப் பொருள்களையும், பேசும் உயிர்களையும், பேசாப் பிராணிகளையும் நோக்கித் துன்ப முற்றவர்கள் உரையாடுதலால் அன்னார் மனத்திலுள்ள ஆற்றாமை