பக்கம்:தமிழ் விருந்து.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி #43 முற்காலப் பெருமையைப் பேசுவதால் பயன் என்ன? பழமை, பழமை என்று பன்னுவது எற்றுக்கு என்று சிலர் எண்ணலாம். பழமையை அறிவதில் பயன் உண்டு. பழம் பெருமையை அறியுந்தோறும் நம் உள்ளத்தில் புதியதோர் ஊக்கம் பிறக்கின்றது. தற்காலத்தில் தேம்பியிருக்கும் தமிழ் நாட்டை முற்காலப் பெருமைக்குத் தக்கவாறு மேம்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சி பிறக்கின்றது. இதனாலேயே பாரதியார் செந்தமிழ் நாட்டைப் போற்றும் பொழுது, " சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய தீவுகள் பலவினும் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புறக் கண்டவர் தாய்நாடு” என்று பாடி மகிழ்ந்தார். கடல் சூழ்ந்த நாடுகளில் சோழநாட்டுப் புலிக்கொடியும், பாண்டி நாட்டு மீன் கொடியும் பறந்த செய்தியை அறியும் பொழுது சிறந்த இன்பமும் ஊக்கமும் நம் முள்ளத்திலே பிறக்கின்றன வல்லவோ? - தமிழ்நாடு இவ் வண்ணம் ஏற்ற முற்றிருந்த காலமே தமிழ் மொழியும் தழைத்தோங்கிய காலமாகும். படைத்திறம் படைத்த பண்டைத் தமிழரசர்கள் பெருங் கொடைத் *\ திறமும் வாய்ந்தவராக விளங்கினார்கள்; அறிஞரையும் புலவரையும் ஆதரித்துப் போற்றினார்கள். கரிகால் வளவன் என்னும் பெருந் தமிழ் வேந்தன், ஒரு தமிழ்ப் பாட்டின் சுவையறிந்து, மனமகிழ்ந்து அதைப் பாடிய பாவலர்க்குப் பதினாறு இலட்சம் பொன் பரிசளித்தான் என்று சொல்லப்படுகின்றது. இத்தகைய பரிசு பெற்ற பாட்டு, பட்டினப்பாலை' எனப்படும்.