பக்கம்:தமிழ் விருந்து.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் விருந்து இவ்வாறு பெருநில மன்னரும் குறுநிலத் தலைவரும் தமிழறிந்தோரை ஆதரித்தமையால் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இனிது வளர்ந்தன. மதுரை மாநகரில் தமிழ்ச் சங்கம் அமைத்துப் பாண்டி மன்னர் தமிழை வளர்த்தார்கள். கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர்கள் அச் சங்கத்தின் அங்கத்தினராய் இருந்தார்கள். இத் தகைய சங்கத்தார் நன்றென ஏற்றுக்கொண்ட நூல்களை நாட்டு மக்கள் போற்றிப் படித்து இன்பமும் பயனும் அடைந்தார்கள் இவ்விதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆன்ற மதிப்பைப் பெற்ற நூல்களுள் தலைசிறந்தது திருக்குறள் என்று கூறலாம். சில காலம் கழிந்த பின்னர் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்கள் எழுந்தன. பண்டைத் தமிழ்நாட்டின் அறமும் பிறவும் இக் காவியங்களால் நன்கு விளங்கும். சாதி சமயம் முதலிய வேற்றுமைகளால் தடையுறாது, நல்லறிஞர் தமிழ்ப்பணி செய்வாராயினர். சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் ஒருமனப்பட்டுத் தமிழை வளர்த்தார்கள். இவ் விதம் சமயப் பொறுமையும் தமிழ் ஆர்வமும் சிறந்து விளங்கிய தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் பிணக்கம் தலைகாட்டத் தொடங்கிற்று. சமண மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பகைமை முதிர்ந்தது. தமிழ் நாட்டு அரசர்களிற் சிலர் சமண சமயத்தை மேற் கொண்டார்கள். சிலர் இந்து சமயத்திலே நின்றார்கள். ஆகவே, எங்கும் குழப்பமும் பிணக்கமும் நிறைந் திருந்தன. இந்த நிலையில் இந்து சமயத்தை ஆதரிப்பதற்கு ஆழ்வார்களும் நாயன்மார்களும்