பக்கம்:தமிழ் விருந்து.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$48 தமிழ் விருந்து நாடெங்கும் மதிக்கப்பட்டார்கள். இவ் வண்ணம் தெய்வத் தமிழ் மணம் எங்கும் பரந்து கமழ்ந்த கிாலம் கி.பி. ஐந்நூறு முதல் எண்ணுாறு வரை என்று பெர்துவாகக் கூறலாம். சங்க காலத்தில் கற்றறிந் தோர்க்கு மட்டும் இன்பம் பயந்த தமிழ் மொழி இத் காலத்தில் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளுங் களிப்பாய் நிலவிற்று. பொதிய மலையில் வாழும் அகத்தியரால் ஆதரிக்கப்பட்டு, சங்கப் புலவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் மாது, இப் பொழுது எல்லார்க்கும் இனியளாய்த் தமிழ் நாட்டில் இனிது உலாவினாள். பெருஞ் செல்வத்தால் வரும் இன்பத்திலும் தமிழ்ப் பாட்டால் வரும் இன்பமே பெரிதாக மதிக்கப்பட்டது. இவ்வாறு பெரியோர் பொருட் செல்வத்தால் வரும் சிறப்பை விரும்பாது அருட் செல்வத்தை நாடி நின்றமையால் தமிழ் நாடெங்கும் பக்திமயமாயிருந்தது. இறைவனைப் பாடாத நாளெல்லாம் பயனற்ற நாள் என்று பாவலர் கருதுவாராயினர். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களும், ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பெருஞ் சிறப்படைந்தன. புதிய கோயில்கள் பல எழுந்தன. கோயில் இல்லா ஊரில் குடியிருத்தல் ஆகாது என்னும் கொள்கை நிலை பெறுவதாயிற்று. மன்னரும் செல்வரும் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். தஞ்சாவூர் இராஜராஜ சோழன் பெரியதொரு கோவிலைக் கட்டி முடித்தான். அவன் மைந்தனாகிய கங்கை கொண்ட சோழன் தன் பெயரால் அமைந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் சிறந்ததோர் ஆலயம் எடுத்தான்.