பக்கம்:தமிழ் விருந்து.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் விருந்து கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பார் கற்றறிந்தோர். கவியரசராகிய கம்பரும் இக் கருத்தை விளக்கியுள்ளார். " மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன்" . . அவனே கடவுள் என்பது கம்பர் கட்டுரை. இவ்வாறு எல்லாவற்றையும் கடவுள் கடந்தவரே யாயினும் அவர் இல்லாத இடம் இல்லை, அவரன்றி ஒர் அணுவும் அசையாது என்பது இந்நாட்டார் கொள்கை. இவ்வுண்மையை அறியாது செருக்குற்றுச் சீரழிந்தவர் பலர் ஆவர். அவர்களில் ஒருவன் இரணியன். அவன் மகனாகிய பிரகலாதன் கடவுளே கதியென்று நம்பியிருந்தான். ஒரு நாள் இரணியன் தன் மகனைப் பார்த்து, 'உன் கடவுள் எங்கிருக்கிறான்? இத் துணில் இருக்கின்றானோ? என்று எதிரே நின்ற கம்பத்தைக் காட்டிக் கடுகடுத்து வினவினான்; அதற்கு மறுமொழி கூறலுற்றான் பிரகலாதன் : "சானினும் உளன்.ஓர் தன்மை அணுவினைச் சதகூ றிட்ட கோனினும் உளன்மா மேருக்குன்றினும் உளன்,இந் நின்ற துனினும் உளன்,முன் சொன்ன சொல்லினும் உளன்" என்று கூறினான். அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த கடவுள், நாம் எண்ணும் ஒவ்வோர் எண்ணத்தினும் உள்ளான், சொல்லும் ஒவ்வொரு சொல்லினும் உள்ளான் செய்யும் ஒவ்வொரு செயலினும் உள்ளான் என்று அறிந்து நடப்பவரே சிறந்தோராவர். பஞ்ச பூதங்களாகிய மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் கலந்து நிற்பவர் கடவுள். இத் தகைய கடவுளை, -