பக்கம்:தமிழ் விருந்து.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள் #51 "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி " என்று திருவாசகம் போற்றுகின்றது. இங்ங்ணம் கானுமிடமெல்லாம், கருதுமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுளுக்கு ஒரு நாமம் இல்லை; ஒர் உருவம் இல்லை. எல்லாம் அவர் திருநாமமே எல்லாம் அவர் திரு உருவமே. "ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ” என்றார் மாணிக்க வாசகர். ஆகையால், நாம பேதங்களையும் உருவ பேதங்களையும் பெரிதாகக் கொண்டு ஒரு மதத்தார் மற்றொரு மதத்தாரைப் பகைக்க வேண்டுவதில்லை; பழிக்க வேண்டுவதில்லை என்பது மெய்யறிவுடையோர் கருத்து. க்விஞராகிய பாரதியார், இக் கருத்தைத் தெளிவாகப் பாடிப் போந்தார் : .. "தெய்வம் பலபல சொல்லிப் - பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் உய்வ தனைத்திலும் ஒன்றாய் - ஓங்கும் ஒர்பொரு ளானது தெய்வம் தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம் திக்கை வணங்கும் துருக்கர் கோயிற் சிலுவையின் முன்னே-நின்று கும்பிடும் ஏக மதத்தார் -