பக்கம்:தமிழ் விருந்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் விருந்து காவியத்தில் பசுக்கள் மீது சிறிதும் t_j ®) ტ5 கொள்ளலாகாது என்னும் கொள்கை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. பசும் புல்லை மேய்ந்து, இனிய பாலைத் தந்து மக்கள் உடம்பை வளர்க்கின்ற பசுக்களை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டுமேயன்றி அவற்றைத் துன்புறுத்தல் ஆகாது என்பது அக் காவியத்தில் உணர்த்தப்படுகின்றது. "விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து இருநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந் தூட்டும்" அருமை வாய்ந்தது பசு ஆதலால் அதனை ஆதரித்தல் வேண்டும் என்பது இந் நாட்டார் கருத்து. பகைவர் நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வரும் செய்கையும் இக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டதாகும். பகைவர் நாட்டில் போர் நிகழும் பொழுது அவ் விடத்தினின்றும் தப்பியோடக்கூடியவர்கள் ஓடி விடுவார்கள். பாதுகாப்பிடங்களை அடையக் கூடியவர்கள் அடைந்து விடுவார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் உயிருக்காக உலைந்து ஒடும்பொழுது, பசுக்களை யார் பாதுகாப்பார்கள்? பசுக்கள் போர்க் களத்தில் அகப்பட்டு இறந்துவிடுமே என்று கருதி, அவற்றை முன்னமேயே வளைத்துக் கொண்டு வந்து மாற்றரசர் தம் நாட்டில் வைப்பார்களென்று அறிந்தோர் கூறுகின்றனர். . இனிப் பண்டைக்காலத்தில் எவ்வாறு படை திரட்டப்பட்டது என்பதையும் சிறிது பார்ப்போம்: அரசன் போர் செய்யக் கருதியவுடன் அவனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/20&oldid=878453" இலிருந்து மீள்விக்கப்பட்டது