பக்கம்:தமிழ் விருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆகாய விமானம் பழங்காலத்தில் தரையிலே போர் நிகழ்ந்தது. இடைக் காலத்தில் தரையிலும் தண்ணிரிலும் போர் நடந்தது. இக் காலத்தில் ஆகாயமும் அமர்க்கள மாயிற்று கருங்கடலில் நீந்திச் செல்லும் மீன்கள் போல நீலவானத்தில் விமானங்கள் பறந்து செல்கின்றன. அந் நாள் கதைகளிற் கேட்ட செய்திகள் எல்லாம் இந் நாளில் நம் கண்ணெதிரே நிகழ்கின்றன. பறக்கும் கோட்டைகளைக் குறித்து ஒரு பழந்தமிழ்க் கவிஞர் பாடியுள்ளார். ஆகாயத்தில் இயங்கிய அக் கோட்டை தூங்கெயில் என்று பெயர் பெற்றிருந்தது. பறக்கும் கோட்டையில் உள்ளேயிருந்து பகைவன் நாடு நகரங்களைப் பாழாக்கினான். அப் பொல்லாப் பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்; அவன் ஊர்ந்து சென்ற ஆகாயக் கோட்டையை ஒரு படைக் கலத்தால் அடித்து ஒழித்தான். அவ் வீரனைத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்று தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது. அம் மன்னன் கையாண்ட படைக்கலம் இன்னதென்பது இப்பொழுது தெரியவில்லை. மற்றோர் அரசன் ஒரு பெரிய நாட்டை ஆண்டு வந்தான். தரையில் போர் செய்வதற்கு நால்வகைச் சேனையும் அவனிடம் நன்கு அமைந்திருந்தன. ஆயினும், விண்ணிலே பறந்து செல்வதற்கு விமானம் ஒன்று செய்ய அவன் பணித்தான். அவன் விரும்பியவாறு ஆகாய விமானம் ஒன்று ஏழுநாளில் ஆக்கப்பட்டது. நல்லரக்கும், மெழுகும், பல்கிழியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/29&oldid=878470" இலிருந்து மீள்விக்கப்பட்டது