பக்கம்:தமிழ் விருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாய விமானம் 29 அரசியலை ஏற்றுக்கொண்ட அமைச்சன் ஒரு நயவஞ்சகன் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன், தேனினும் இனிய சொற்களால் மன்னனது மாசற்ற மனத்தைக் கவர்ந்து வசப்படுத்தியவன்; அரசாங்க வேலைகளில் அரசன் சிறிதும் தலையிடுவ தில்லை என்பதை அறிந்துகொண்டு மெல்ல சூழ்ச்சி செய்யத் தொடங்கினான்; நால்வகைப் படைகளுக்கும் வேண்டுவன கொடுத்து அவற்றை வளைத்துக் கொண்டான், அரசனிடம் அன்பு கொண்ட குடிகளிற் பலரை நால்வகை உபாயங்களால் வசப்படுத்தினான்; அரசனையும் சிறை பிடிப்பதற்குக் காலம் பார்த் திருந்தான். ஒருநாள் காலையில் அரண்மனையைச் சுற்றிப் பெரிய ஆரவாரம் உண்டாயிற்று. படைகளின் முழக்கம் கடலொலிபோல் எழுந்தது. மாளிகையைச் சேனை சூழ்ந்து கொண்டது என்று மன்னன் அறிந்தான்; அமைச்சன் மோசம் செய்தான் என்று உணர்ந்தான். ஆயினும், சிறிதும் கலக்கம் கொள்ளாது கருவுற்றிருந்த தன் மனையாளிடம் போந்து, "மாசறு பொன்னே ! நான் மதிமோசம் போனேன். அமைச்சனாகிய வஞ்சகன் என் படைகளை வசப்படுத்திக் கொண்டான்; என்னையே தாக்கத் துணிந்து சேனைகளுடன் மாளிகையை வளைத்துள்ளான். ஆயினும், என்? காகமானது கோடி கூடினும் ஒரு கல்லின் முன்னெதிர் நிற்குமோ? நெஞ்சார வஞ்சகம் செய்த பாவியின் படைகளைப் பஞ்சாக நான் பறக்கடிப்பேன். எனினும், கடும் போர்க்களத்தைக் கண்டால் நீ கலங்குவாய். ஆதலால், மயில் விமானத்தின் மீதேறி நீ வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/31&oldid=878474" இலிருந்து மீள்விக்கப்பட்டது