பக்கம்:தமிழ் விருந்து.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ் விருந்து பறந்து செல். நன்றி கெட்ட இந் நாய்களை நான் கொன்று குவித்த பின்னர் உன் இருப்பிடம் நாடி அழைத்துக்கொள்வேன்" என்று கூறினான். நாயகன் சொல்லிய சொல் நங்கையின் செவிகளைச் சுட்டது; அவள் மனத்தை அறுத்தது. "ஐயோ ! தெய்வமே நான் என் செய்வேன் ! என் மேல் வைத்த காதலாலன்றோ என் கணவன் இந்நிலை அடைந்தார்? பாவியேன் பொல்லாத கனவொன்று கண்டேனே 1 அக் கனவும் நனவாயிற்றே ! அரசரே ! யாரும் துணையற்ற உம்மை நான் எவ்வாறு விட்டுப் பிரிவேன். நானும் உம்முடன் இருந்து ஒல்லும் வகையால் உதவி செய்வேன். உயிரைப் பிரிந்து உடல் பறந்து செல்லுமோ?" என்று அவள் உருக்கமாகக் கேட்டாள். போர்க்களம் செல்வதற்குப் பரபரப்புற்ற இளஞ் சிங்கம் போன்ற மன்னவன், மயங்கி நின்ற மங்கையை நோக்கி, "எல்லாம் அறிந்த நீ இவ்வாறு கலங்கலாமோ? மெல்லியல் வாய்ந்த மாதரைப் போர்க்களத்திற்கு வெளியே அனுப்பிய பின்னன்றோ அறப்போர் வீரர் படைக்கலம் எடுத்து மாற்றாரை நோக்கிச் செல்வர்? கருவுற்ற உன்னை அருகே வைத்துக்கொண்டு கடும்போர் புரிய என்னால் இயலுமோ? இதோ, மயில் விமானம் வந்துவிட்டது ஏறிக்கொள் !" என்று சொல்லி மங்கையை விமானத்தில் ஏற்றினான். இருதலைக் கொள்ளியின் இடைப்பட்ட எறும்பு போல் இடருற்ற மங்கை, விமானத்தில் ஏறியிருந்து வெதும்பிய மனத்தோடும் நடுங்கிய கரத்தோடும் அதனை இயக்கத் தொடங்கினாள். விமானம் பறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/32&oldid=878476" இலிருந்து மீள்விக்கப்பட்டது