பக்கம்:தமிழ் விருந்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாய விமானம் 34 எழுந்து சென்றது. நொடிப்பொழுது அம்மயிலை அரசன் நோக்கி நின்றான்; கண்ணில் விழுந்த கண்ணிரைத் துடைத்து விட்டுப் போர்க் கோலம் புனைந்து பொங்கி எழுந்தான்; கொடிய வாளை வீசிக் கொண்டு மாளிகையின் புறத்தே நின்ற சேனையின்மீது பாய்ந்தான். அவன் சென்ற இடமெல்லாம் சேனை சின்னபின்னமாயிற்று. பரந்த படையின் நடுவே ஒரு பெரிய வேழத்தின்மீது வஞ்சகனாகிய அமைச்சன் அமர்ந்திருக்க அவன் கண்டான்; உடனே வாய் மடித்து வாளோச்சி அவ்விடம் நோக்கிப் பாய்ந்தான். குருதியாறுகளைக் கடந்து விரைந்தான். பகைவர் விடுத்த அம்புகள் அவன் மேனியிற் பாய்ந்தன. அவர் எறிந்த படைக்கலங்கள் அவன் உடலை அறுத்தன. நெடும் பொழுது அங்குமிங்கும் பாய்ந்து அவன் கடும்போர் விளைவித்தான்; இறுதியில் கை சோர்ந்து மெய்சோர்ந்து விழுந்தான் உயிர் துறந்தான். அமர்க்களத்தில் விழுப்புண் பட்டு இறந்த அரசனைக் கண்டு சான்றோர் மயங்கினர். மறவரும் இரங்கினர். கோளரியைக் குறுநரி வென்றாற்போல அரசனை வென்று நாடாளும் உரிமை பெற்றான் அமைச்சன்; தானே இனி அரசன் என்று நகரமெங்கும் பறையறிவித்தான். - மயிலேறிப் போந்த மங்கையின் கைவிரல்கள் இயங்கும் பொறியில் இருந்தனவாயினும் அவள் மனம் போர்க்களத்தையே நாடியது. ஆதலால், விமானம் மெல்ல ஊர்ந்தது. ஒரு காட்டின்மீது சென்று கொண்டிருக்கையில் வெற்றி முரசத்தின் ஒலி மங்கையின் செவியில் விழுந்தது; வஞ்சகனாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/33&oldid=878478" இலிருந்து மீள்விக்கப்பட்டது