பக்கம்:தமிழ் விருந்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையும் வைராக்கியமும் 33 "என் கண்மணி ! இம் முதுகாட்டிலே நரி ஊளை யிடுகின்றது; பிணத்தைச் சுடும் நெருப்பு கொழுந்து விட்டெரிகின்றது. கோரமான பேய் கொக்கரித் தாடு கின்றது. சுடுகாட்டைச் சூழ்ந்து கூகை குழறுகின்றது. மன்னன் மைந்தனாகிய நீ பிறந்தவாறு இதுவோ?" என்று அவள் அழுது சோர்ந்தாள். இங்ங்னம் சுடுகாட்டிற் பிறந்த மைந்தன் சீவகன் என்னும் பெயர் பெற்றுச் சிந்தாமணியின் தலைவனாயினான். 5. வாழ்க்கையும் வைராக்கியமும் வைராக்கியம் என்ற சொல்லைக் கேட்டவுடனே தமிழ்நாட்டில் வழங்கும் இரண்டொரு வாசகம் நம் நினைவிற்கு வருகின்றது. ஒன்று, புராண வைராக்கியம்: மற்றொன்று, மயான வைராக்கியம். இவ்விரண்டையும் சிறிது பார்ப்போம். ஒரிடத்தில் கம்பராமாயணக் கதை நடக்கிறது. இராமனைக் காட்டுக்குப் போகும்படி கட்டளையிடுகிறாள் கைகேயி. கோசல நாட்டுச் செல்வம் எல்லாம் இனிப் பரதனுக்கே உரியது. இது மன்னவன் ஆணை என்று பேசுகின்றாள். அது கேட்ட இராமன் அகமலர்ந்து கைகுவித்து, "மன்னவன் பணியன் றாகில் நும்பணி மறுப்ப னோஎன் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னினி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்” என்று காட்டை நோக்கிப் புறப்படுகிறான். இந்தப் பாட்டைக் கேட்கின்றான் ஒருவன். அவனுக்கும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/35&oldid=878482" இலிருந்து மீள்விக்கப்பட்டது