பக்கம்:தமிழ் விருந்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ், விருந்து நம்பி இருக்கின்றேன் என்று எண்ணினாயா? என் தோள்வலியை நம்பியே சீதையை எடுத்து வந்தேன். எடுத்து வந்த மங்கையைக் கொடுத்துவிடுதல் ஈனமன்றோ? மானமே உயிரினும் பெரிது வீரப் புகழே வாழ்வினும் விரும்பத் தக்கது. "வென்றிலன் என்ற போதும் வேதமுள் ளளவும் யானும் நின்றுள னன்றோ மற்றவ் விராமன்பேர் நிற்கு மாயின் பொன்றுதல் ஒருகா லத்தும் தவிருமோ, பொதுமைத் தன்றோ இன்றுளர் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதியுண்டோ என்று சினந்து பேசினான். அதுகேட்ட இந்திரசித்தன் குன்று முட்டிய குருவிபோல் மீண்டும் போர்க்களம் போந்தான்; அரும்போர் புரிந்து ஆவி துறந்தான். இறுதியில் இராவணனும் போர் புரிந்து மாண்டான். தமிழ்நாட்டில் வழங்கும் மற்றொரு சரித்திரமும் தவறான வைராக்கியத்தால் வரும் கேட்டைக் காட்டு கின்றது. சூரன் என்பவன் ஒரு பேரரசன் வீர மகேந்திரம் என்னும் நகரில் அரசு வீற்றிருந்தான்; வானவர் நாட்டின்மீது படையெடுத்து, இந்திரன் மகனாகிய சயந்தனையும் தேவரையும் பிடித்துச் சிறை வைத்தான். அவர்களை விடுவிப்பதற்காக முருகன் படை எழுந்தது. சூரன் மகனாகிய பானுகோபன் அச் சேனையை எதிர்த்தான்; வீரவேல் கொண்டு போர் புரியும் முருகனை ஒரு நாளும் வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்தான், சூரனிடம் சென்று, அரசே ! இன்று மாற்றார்மீது மாயப் படையை ஏவினேன். அதனினும் சிறந்த படைக்கலம் என்னிடம் இல்லை. அம்மாயப் படையும் பயனற்றுப் போயிற்று. நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/40&oldid=878493" இலிருந்து மீள்விக்கப்பட்டது