பக்கம்:தமிழ் விருந்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையும் வைராக்கியமும் - 39 நெடுங்காலம் வாழவேண்டும்; அரசாள வேண்டும் என்பது ஆசை. அவ்வாசையால் ஒன்று கூறுகின்றேன்; வானவரை நீ சிறையினின்றும் விட்டுவிட்டால் படையெடுத்து வந்த முருகன் நம் நாட்டைவிட்டு அகல்வான்; சீற்றம் தீர்வான். உன் அரசு நீடூழி வாழும்' என்றான். அவ் வுரை கேட்ட சூரன் பொங்கி எழுந்தான். 'மைந்தா ! என் முன்னின்று என்ன பேசினாய்? வானவரை விட்டேனென்றால் என்னை யார் மதிப்பார்? இவ் வுலக வாழ்க்கை நிலையற்றதென்பதை நீ அறியாயோ? இளமையும் செல்வமும் வீரமும் இனைய பிறவும் அழிந்தே தீரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே. ஆதலால், என் ஆவி கொடுத்து அரும்புகழ் பெறுவேனே யன்றி, வானவரை விடுவித்து வசையினுக்கு ஆளாகி வாழமாட்டேன். "இறந்திட வரினும் அல்லால் இடுக்கண்ஒன் றுறினும் - தம்பால் பிறந்திடும் மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர் சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும் துறந்திடேன் பிடித்த கொள்கை, சூரன்என் றொருபேர் பெற்றேன்" என்று எரிந்து பேசினான். அது கேட்ட பானுகோபன் அமர்க்களம் போந்து, வீரப்போர் புரிந்து ஆவி துறந்தான். பின்னர்ச் சூரனும் போர் செய்து மாண்டான். அரக்கர் தலைவனாகிய இராவணனும், அசுரர் தலைவனாகிய சூரனும் தவறான வழியில் சென்றார்கள். 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்றபடி விடாக்கண்டராய் நின்றார்கள்: வீழ்ந்து ஒழிந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/41&oldid=878495" இலிருந்து மீள்விக்கப்பட்டது