பக்கம்:தமிழ் விருந்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழ் விருந்து கண்ணகியின் சீற்றத்தால் உயிரிழந்து அழியாப் புகழ் பெற்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டியன், புலமை வாய்ந்த முடிவேந்தருள் ஒருவன். கலையின் சுவை யறிந்த அக் காவலன், எல்லோரும் கல்வி கற்று மேம்பட வேண்டும் என்று ஆசையுற்றான். 'கற்றவர் மேலோர்; கல்லாதவர் கீழோர் என்பது அவன் கொள்கை "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் x மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” என்று அவன் பாடிய பாட்டால், பிறப்பினால் வரும் சிறப்பினும், கல்வியறிவினால் எய்தும் பெருமையே உயர்ந்த தென்பது இனிது விளங்குகின்றதன்றோ? இனி, சோழ நாட்டு மன்னனாகிய கோப்பெருஞ் சோழனைப் பார்ப்போம் : அவனும் கவி பாடும் திறம் பெற்றவன்; தமிழறிந்த புலவர்களைத் தலைக்கொண்டு போற்றியவன். அச் சோழன், செல்வத்தில் தனக்கு நிகராகிய ஒருவனைத் தோழனாகக் கொண்டான் அல்லன் பிசிராந்தையார் என்னும் புலவரை உயிர் நண்பராகக் கொண்டான். சோழநாட்டின் தலை நகராகிய உறையூரில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருந்தான். பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்னும் சிற்றுாரில் புலவர் குடியிருந்தார். சோழன், செல்வச் செழுமை வாய்ந்தவன். பிசிராந்தையார் புலவர்க்குரிய வறுமை பூண்டவர்; எனினும், சோழனுக்கு ஆந்தையே உயிர்த்தோழர் ஆயினார். இத் தகைய அரசன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணா விரதம் பூண்டான். அந் நிலையில் அவன் மனம் பிசிராந்தை யொருவரையே நாடிற்று. நண்பர் வருவார் வருவார்' என்று அவன் வழிமேல் விழிவைத்திருந்தான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/46&oldid=878505" இலிருந்து மீள்விக்கப்பட்டது