பக்கம்:தமிழ் விருந்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HH 6. புறநானூறு செந்தமிழ் நாட்டின் பழம் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்களுள் புறநானூறு ஒன்று. பல புலவர்கள், பலரைப்பற்றி, பல காலத்தில் பாடிய பாட்டுக்கள் அந்நூலிற் காணப்படும். அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்களில், அறத்தையும், பொருளையும் பற்றிய நானூறு பாட்டுக்கள் தொகுக்கப்பட்டிருத்தலால், அந் நூல் புறநானூறு என்னும் பெயர் பெற்றது. புறநானூற்றிலே படைத்திறம் உடைய பெரு வேந்தரைக் காணலாம். கொடைத் திறம் வாய்ந்த கொற்றவரைக் காணலாம்; கற்றறிந்தடங்கிய சான்றோரைக் காணலாம். சுருங்கச் சொல்லின், கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பண்டைத் தமிழ்நாட்டைப் புறநானூற்றிலே காணலாம். அக் காலத்து மன்னர் பலர் பொன்மலர் நறுமணம் கமழ்ந்தாற் போன்று, புவிச்செல்வத்தோடு கவிச் செல்வமும் பொருந்தப்பெற்று விளங்கினார்கள். முடியுடை மன்னராய் முத்தமிழ் நாட்டையாண்ட சேர சோழ பாண்டியரிற் சிலர் பாடிய கவிகள் புறநானூற்றிலே உண்டு. கற்பின் செல்வியாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/45&oldid=878503" இலிருந்து மீள்விக்கப்பட்டது