பக்கம்:தமிழ் விருந்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானு:இ! 47 இத் தகைய பெரியோரைத் தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர் என்று தமிழகம் போற்றுகின்றது. இவர்கள் இருத்தலாலேயே இவ் வுலகம் நிலைத் திருக்கின்ற தென்ற தியாகத்தின் பெருமையைப் பாராட்டிப் பாடினான் இளம்பெருவழுதி என்னும் பாண்டியன். அதிகமான் என்னும் சிற்றரசன் அமுதம் நிறைந்த கருநெல்லிக் கனியைத் தான் உண்டு நெடுங்காலம் வாழக் கருதாது, நல்ல தமிழ்ப் பாட்டியற்றிய ஒளவையார்க்கு மனமகிழ்ந்து கொடுத்தான் அன்றோ? அதிகமானின் தமிழார்வத்தையும் தியாகத்தையும் ஒளவையார் வாயார வியந்து வாழ்த்தினார். ஆண் பெண் ஆகிய இருபாலாரும் பாடியுள்ள கவிகளைப் புறநானூற்றிலே காணலாம். கல்வியிற் கடைப்பட்டோர் என்று இக்காலத்திற் கருதப்படுகின்ற குலங்களிற் பிறந்த பெண்மணிகள், முற்காலத்தில் கவி பாடியுள்ளார்கள். மலைநாட்டை யாண்ட ஏறைக் கோன் என்பவனை ஒரு குறமகள் பாடினாள். கரிகாற் சோழனை வெண்ணி என்னும் ஊரிற் பிறந்த குயத்தி பாடினாள். எயினக் குலத்திற் பிறந்த ஒரு மங்கை வஞ்சி மாநகரின் வளம் பாடினாள். இங்ங்னம் கல்வி சிறந்த தமிழ் நாட்டில் முடி வேந்தருக்கு அடுத்த வரிசையில் அமைந்த சிற்றரசர்களிற் சிலர் சிறந்த வள்ளல்களாக விளங்கினார்கள். பாண்டி நாட்டிலுள்ள பறம்பு மலையையும், அம்மலையை யடுத்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான் பாரி என்னும் சிற்றரசன். அவன் மனத்தில் எழுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/49&oldid=878511" இலிருந்து மீள்விக்கப்பட்டது