பக்கம்:தமிழ் விருந்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையும் மதுவிலக்கும் 55 "தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினிர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ" என்று நல்லார் வாழ்த்தினார்கள். ஆகவே, மாநிலம் காக்கும் மன்னவனை நீதி வழுவாத நெறி முறையே காக்கும் என்னும் அரசியற்கொள்கை சிலப்பதிகாரத் தால் உணர்த்தப்படுகின்றது. இத்தகைய செஞ்சொற் காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்த வஞ்சிக் கோவை நெஞ்சார வாழ்த்துவோமாக ! 8. மணிமேகலையும் மதுவிலக்கும் - இயற்கை வளம் நிறைந்த தமிழ் நாட்டில் பனையும் தென்னையும் பல்லாயிரம் உண்டு. பாண்டிநாடு தொன்று தொட்டுப் பனைவளம் படைத்ததாகும். சோழ நாட்டிலும் சேர நாட்டிலும் தென்னைச் செல்வம் சிறந்து விளங்குகின்றது. தென்னையிலும் பனையிலும் ஊறுகின்ற மது ஆறாகப் பாய்வதற்குப் போதியதாகும். ஆயினும், தென்னாட்டில் பிறந்த சமயங்களும், புகுந்த சமயங்களும் மதுவிலக்குப் பிரசாரம் செய்தன. சைவமும் வைணவமும், பெளத்தமும் சமணமும், மகம்மதியமும் கிருஸ்தவமும் மதுபானத்தைக் கடிந்தன. மற்றைய கொள்கைகளில் பிணக்க முற்ற இப் பெருஞ் சமயங்கள் மதுவிலக்குக் கொள்கையில் இணக்க முற்றுப் பணிசெய்த பான்மையிலேயே தமிழ்நாட்டில் மதுபானம் மட்டுப்படுவதாயிற்று. தமிழ் மொழியில் இறவாத பெருநூல்கள் இயற்றிய பேரறிவாளரும் தம் கவிகளின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்துள்ளார்கள். தமிழ்மறையென்று தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/57&oldid=878528" இலிருந்து மீள்விக்கப்பட்டது