பக்கம்:தமிழ் விருந்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் விருந்து நாட்டார் போற்றும் திருக்குறள், மனித சமுதாயத் துக்குக் கேடு விளைவிக்கும் மூன்று தீமைகளை மிக அழுத்தமாகக் கண்டிக்கிறது. விபசாரம், மதுபானம், சூதாட்டம் இம் மூன்றும் செல்வத்தைச் சிதைத்துச் சீர்மையை அழிக்கும் என்று அந் நூல் கூறுகின்றது. "இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு" என்பது வள்ளுவர் வாய்மொழி. சமண முனிவராகிய பவணந்தியார், நன்னூல் என்னும் இலக்கண நூலின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்கின்றார். கள்ளுண்பவர் கல்வியறிவைப் பெறுதற்கு உரியரல்லர் என்பது அவர் கொள்கை. 'களிமடி மானி காமி கள்வன் முதலியவர்கள் கல்வி பெறுதற் குரியராகார் என்று ஆசிரியர் கட்டுரைக் கின்றார். கள்ளுண்பவன் 'களி' எனப்படுவான். மாணவராதற்குத் தகுதியற்றவர்களில் முதல் வரிசையில் முதலாகக் கள்ளுண்பவனை வைத்தமையால் மதுவிலக்குப் பிரசாரத்தில் நன்னூலார்க்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்று விளங்குகின்ற தன்றோ? - - பெளத்த சமயத்தைச் சார்ந்த நூல் மணிமேகலை. அந் நூல் ஐந்து சிறந்த கொள்கைகளைப் பஞ்சசீலம் எனப் பாராட்டுகின்றது. பஞ்சசீலம், வாய்ந்தோரே சிறந்தோர் ஆவர். கள்ளுண்ணாமை, பொய்யுரையாமை, கொலை செய்யாமை, களவு செய்யாமை, விபசாரம் செய்யாமை ஆகிய ஐந்தும் பஞ்சசீலம் எனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/58&oldid=878532" இலிருந்து மீள்விக்கப்பட்டது