பக்கம்:தமிழ் விருந்து.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 தமிழ் விருந்து மங்கையின் மனை முற்றத்திற் போந்து, மணிமேகலை திருவோடேந்திப் புனையா ஒவியம்போல நின்றாள். ஆதிரை அன்போடு அன்னமெடுத்து வந்து மணி மேகலையை வலம் வந்து தொழுது பாரெங்கும் பசிப் பிணி ஒழிக" எனத் திருவோட்டை வாழ்த்தி அதன் சுரை நிறைய அன்னமிட்டாள். இங்ங்னம் பசியைச் சபித்த பாவையின் திறத்தினை, "பாரக மடங்கலும் பசிப்பிணி யறுகென ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து" என்று மணிமேகலை போற்றுகின்றது. பசிப்பிணி யென்னும் பாவியை இப் பாரினின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை, அவள் கணவனாய சாதுவன், மது என்னும் அரக்கனை இம்மாநிலத்தி னின்றும் அகற்ற முயன்றான். ஒரு நாள், கப்பலேறி வங்க நாட்டுக்குப் புறப்பட்டான். நடுக்கடலிற் கப்பல் செல்லும் பொழுது ஒரு சுழல் காற்று எழுந்தது. மரக்கலம் சின்னபின்னமாகச் சிதைந்து தாழ்ந்தது. கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சிலநாள், இரவு பகலாக அலைகளால் மொத்துண்டு அலைந்த அம் மரம், ஒரு தீவிலே அவனைக் கொண்டு சேர்த்தது. அங்கே, நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்து வந்தார்கள்; விலங்குகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்முள் ஒருவனைத் தலைவனாகவும் குருவாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண்கரடி போன்றவன். அவன் மனையாள் பெண்கரடி போன்றவள். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனை நாகர் சிலர் கண்டார்கள்; நரமாமிசம் கிடைத்ததென்று, நாக்கு ஊறினார்கள்; தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/60&oldid=878537" இலிருந்து மீள்விக்கப்பட்டது