பக்கம்:தமிழ் விருந்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமேகலையும் மதுவிலக்கும் 59 குருநாதனிடம் அவனைக் கொண்டு சென்றார்கள். பசியால் மெலிந்து, குளிரால் நலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து நோக்கினான்; "நீ யார்? இங்கு வந்த காரணம் என்னை?" என்று நாக நாட்டு மொழியிலே வினவினான். அம் மொழியை அறிந்திருந்த சாதுவன் கருங்கடலில் நேர்ந்த துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான். அந் நிலையில் குருநாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயருற்ற நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் நல்ல ஊனும் கொடுக்கும்படி அவன் அருகே நின்ற நாகரைப் பணித்தான் ! அவ்வுரை கேட்ட சாதுவன் திடுக் கிட்டான்; இருகையாலும் செவியைப் பொத்திக் கொண்டு, 'ஐயனே கள்ளும் ஊனும் வேண்டேன்' என்று உறுதியாக உரைத்தான். அவ் வுரை கேட்ட குருநாதன் வியப்படைந்தான்; 'கள் என்ற சொல்லைக் கேட்ட பொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ? நாவுக்கினிய ஊனையும், கவலையை ஒழிக்கும் கள்ளையும் விலக்கலாமோ?' என்று வெகுண்டு வினவினான். இது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையைக் குருநாதன் மனங்கொள்ள உணர்த்தலுற்றான் : "ஐயனே மானிடப் பிறவியில் நாம் அடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச் செல்வமே ஆகும். அவ் வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் இவற்றைப் பகுத்து உணர் கின்றோம். இத் தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர்; அதனைக் கெடுக்கின்றவர் கீழோராவர். மதுபானம் நம் அறிவை மயக்குகின்றது; நாளடைவில் அதனைக் கெடுத்துவிடுகின்றது. செய்யத் தக்கது. இது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/61&oldid=878540" இலிருந்து மீள்விக்கப்பட்டது