பக்கம்:தமிழ் விருந்து.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நளவெண்பா 63 என்ற பாட்டு, காதலின் வெம்மையாற் கனிந்த நளன் உள்ளத்தை நன்கு காட்டுகின்றது. நளனுக்கு நன்மை செய்ய விரும்பிய நல்லன்னம் தமயந்தியிடம் விரைந்து போந்தது. அக் கன்னியைத் தனியிடத்திற் கண்டு நளனுடைய நலன்களை யெல்லாம் எடுத்துரைத்தது : "செம்மணத்தான், தண்ணளியான், செங்கோலான் மங்கையர்கன் தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்-மெய்ம்மை நளன்என்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான் உளன்என்பான் வேந்தன் உனக்கு" என்று அன்னம் சொல்லியபொழுது கன்னி உள்ளம் கனிந்தாள், நளனிடம் காதல் கொண்டாள்; அவனையே மணப்பதாக வாக்களித்தாள். உருவிலும் திருவிலும் ஒப்பற்ற காதலர் இருவரும் மணம் புரிந்து இன்புற்று வாழ்ந்தார்கள். இவ்வாறிருக்கையில், ஒரு நாள் நளன் சூதாடினான்; தனக்குரிய செல்வத்தை யெல்லாம் பணயமாக வைத்துத் தோற்றான்; கண்போன்ற மக்கள் இருவரையும் விதர்ப்ப மன்னனிடம் அனுப்பிவிட்டு, மனையாளோடு கானகம் போந்தான்; அங்கு நள்ளிரவில் கண்ணுறங்கிய காதலியைக் கைவிட்டு அகன்றான். "தீக்கா னகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன் கோக்கா தலியைக் குறிக்கொள்மின்-நீக்காத காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டுஇன்று ஏதிலன்போல் போகிறேன் யான்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/65&oldid=878547" இலிருந்து மீள்விக்கப்பட்டது