பக்கம்:தமிழ் விருந்து.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் விருந்து H 1. கலையும் கற்பன்ையும் கலைச் செல்வமே ஒரு நாட்டின் செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வம். அச் செல்வம் எண், எழுத்து என்னும் இருவகையில் அடங்கும். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப, இவ்விரண்டும் கண்ணென்ப" என்பது திருவள்ளுவர் வாக்கு இவற்றுள் காவியம், ஒவியம் முதலிய கலைகள் கற்பனை நயத்தால் இன்பம் பயக்கும். கற்பனை, நாட்டின் தன்மைக்குத் தக்கவாறு அமையும். வெப்பம் மிகுந்த நாட்டில் வசிப்பவர்கள் குளிர்மையை விரும்புவர். தமிழ்நாடு பெரும்பாலும் வெப்பமுள்ள நாடு. நீர் நிறைந்த ஆறுகளையும், நிழல் அமைந்த சோலை களையும் காவிய உலகத்திற் காணும்பொழுது நம் உள்ளம் குளிர்கின்றது. குளிர்மையில் உள்ள ஆசையால் அன்றோ நீரைத் தண்ணிர் என்கிறோம்; அன்பை ஈரம் என்கின்றோம் ஆண்டவன் சேவடியைத் திருவடி நிழல் என்கின்றோம்? திருவடி நிழலின் இனிமையை உணர்த்துகின்றார் திருநாவுக்கரசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/7&oldid=878557" இலிருந்து மீள்விக்கப்பட்டது