பக்கம்:தமிழ் விருந்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் விருந்து " மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூக வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே " என்பது தேவாரத் திருப்பாட்டு. வெப்பத்தால் வாடி வருந்துவோர் குளிர்மையைக் கண்டு இன்புறுதல் போன்று, பிறவித் துன்பத்தால் வருந்துவோர் ஆண்டவன் திருவடியை அடைந்து மகிழும் பெற்றியைப் பெரியோர்கள் அழகாகப் பாடியுள்ளார்கள். ஆண்டவன் அளிக்கும் பேரின்பம், கோடையிலே இளைப்பாற்றும் குளிர் பூஞ்சோலை யாகவும், ஒடையிலே ஊறுகின்ற தெள்ளிய நீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய தென்றலாகவும் ஒரு தமிழ்க் கவிஞரது கற்பனையிலே காட்சி தருகின்றது : "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த குளிர்தருவே, தருநிழலே, நிழல்கனிந்த கனியே ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணிரே உகந்ததண்ணி ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே ஆடையிலே எனைமணந்த மணவாளா, பொதுவில் ஆடுகின்ற அரசே,என் அலங்கல்அணிந் தருளே’ என்று பாடினார் இராமலிங்க அடிகளார். நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ் நாட்டில் பண்டைக்கால முதல் பயிர்த்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது. முற்காலத் தமிழர், தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்; சீரைத் தேடின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/8&oldid=878576" இலிருந்து மீள்விக்கப்பட்டது