பக்கம்:தமிழ் விருந்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கற்பனையும் 7 ஏரைத் தேடு என்றார் ஒரு புலவர் ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங் கானாப் பிள்ளையும், மழை முகங்கானாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந் தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழை மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும்; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும். மழைக் குறிகளைக் கண்டு உழவர் அடையும் ஆனந்தக் களிப்பைத் தமிழ்ப் பாட்டிலே &#5fTGF6R)fTLÊ. "ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி - மலை யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்ற டிக்குதே - கேணி நீர்ப்படுசொ றித்தவளை கூப்பி டுகுதே சேற்றுநண்டு சேற்றில்வளை ஏற்றடைக்குதே - மழை தேடியொரு கோடிவானம் பாடி யாடுதே போற்றுதிரு மாலழகர்க் கேற்றமாம் பண்ணைச்-சேரிப் புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே” என்ற பாட்டு உழவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. வானத்திலே திரண்டு எழுந்து செல்லும் மழை மேகத்தை கார்மேகத்தைக் - கருணை யின் வடிவமாகக் கண்டு தமிழ்நாட்டார் போற்றி னார்கள்; கார்மேகமே உலகத்தைக் காக்கும் என்று கருதிக் கைதொழுதார்கள்; மன்னுயிரை யெல்லாம் காத்தருளும் தெய்வமாகிய திருமாலுக்கும் அவ் வண்ணத்தையே அமைத்தார்கள் கருமுகில் வண்ணன், என் கண்ணன்' என்றார்கள். திருவேங்கடம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_விருந்து.pdf/9&oldid=878598" இலிருந்து மீள்விக்கப்பட்டது